மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தை அணுக தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பு இடங்கள் காலியாக உள்ளதால் தங்களுக்கு இடம் ஒதுக்கக்கோரி இருவர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மருத்துவ மேற்படிப்பில் காலி இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தக்கோரிய வழக்கு செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மலை கிராமங்கள் மற்றும் கிராமப்புறங்களில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் தமிழக அரசு சிறப்பு சலுகை வழங்கி வருகிறது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவ உயர் படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என அதிரடியாக தீர்ப்பளித்தது. மேலும், இடஒதுக்கீடு வழங்குவதற்கோ ரத்து செய்வதற்கோ இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை எனவும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை மாநில அரசுகள் இயற்ற முடியும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. மாணவர்களுக்கு இறுதிக் கட்ட கலந்தாய்வு நடத்தாமல் தனியார் கல்லூரிகளில் நேரடியாக சேர்க்கை நடக்கிறது. தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கை மீறப்பட்டுள்ளது என்று புகார் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups