மாத சராசரி இருப்புத் தொகை இல்லாததற்கான கட்டணம், எஸ்.எம்.எஸ்., சேவைக்கான கட்டணம் ஆகியவற்றை, வாடிக்கையாளர்கள் இனி செலுத்த தேவை இல்லை' என, எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அதன் குறைந்தபட்ச இருப்புத் தொகையை, மாதம்தோறும் வைத்திருக்க வேண்டும். இந்த தொகை, வங்கிகளுக்கேற்ப மாறுபடும்.எஸ்.பி.ஐ., வங்கி வாடிக்கையாளர்கள், பெரு நகரங்களில் கணக்கு வைத்திருப்போர், 3,000 ரூபாய்; நகர்ப்புறங்களில், 2,000 ரூபாய்; ஊரகப்பகுதிகளில், 1,000 ரூபாய், குறைந்தபட்ச இருப்புத் தொகையாக கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
தற்போது, மாத சராசரி இருப்புத் தொகை, எஸ்.எம்.எஸ்., சேவைக் கட்டணம் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது.எஸ்.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:வாடிக்கையாளர்களின் மொபைல் போன் எண்ணிற்கு, பணம் எடுத்தல், செலுத்துதல், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்பாடு என, அனைத்து பயன்பாட்டிற்கும், எஸ்.எம்.எஸ்., வாயிலாக, 'அலர்ட்' தகவல் அனுப்பப்படும்.இதற்கு, 12 ரூபாய் கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். இது, கணக்குகளுக்கேற்ப மாறுபடும்.இதே போல, மாத சராசரி இருப்புத் தொகை இருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லையெனில், குறைந்த பட்சம், 5 ரூபாய் முதல், அதிகபட்சம், 15 ரூபாயுடன், ஜி.எஸ்.டி., யும் சேர்த்து வசூலிக்கப்படும். இந்த கட்டணமும் கணக்குகளுக்கேற்ப மாறுபடும்.தற்போது, இந்த இரண்டு கட்டணங்களையும், வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை; கட்டணமில்லா சேவையை இனி பெறலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups