ஓவியத்தில் திருக்குறளை விளக்கும் பேராசிரியை...!! நாளொன்றுக்கு ஒரு ஓவியத்தை தீட்டி அசத்தல்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 24, 2020

ஓவியத்தில் திருக்குறளை விளக்கும் பேராசிரியை...!! நாளொன்றுக்கு ஒரு ஓவியத்தை தீட்டி அசத்தல்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அறிஞர்களை போல உரை எழுதியும், கலைஞரை போல கதை சொல்லியும் திருக்குறளுக்கு விளக்கம் கொடுத்திருக்கின்றன புதுச்சேரியை சேர்ந்த பேராசிரியர் சௌமியா. அதாவது ஓவியங்கள் வழியே குரலை வளர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அறம், பொருள், இன்பம் என வாழ்வியலை பகுத்து நீதி சொல்லும் உன்னத படைப்பு திருக்குறள். உலக பொதுமறையாம் திருக்குறளை, ஓவியத்தில் விளக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் புதுச்சேரியில் வசித்து வரும் பேராசிரியை சௌமியா.
குழந்தையுடன் தனியாக வசித்து வரும் சௌமியா, தமிழின் மீதான காதலால் தனது பெயரை 'இயல்' என மாற்றிக்கொண்டார். ஆங்கில இலக்கியங்களை ஓவியமாக்குவதை பார்த்து, திருக்குறளை ஓவியமாக்கும் எண்ணம் இவருக்கு வந்துள்ளது. பகிர்ந்துண்ணும் பழக்கம் உடையவர்களை பசி என்னும் கொடிய நோய் அணுகுவதில்லை என சொல்லும், 'பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது'. என்ற குரலை தற்போது ஓவியமாக்கி வருகிறார். இதனையடுத்து வள்ளுவர் ஈரடியில் உலகை அளந்தார் என்றால், அந்த ஈரடியை 15க்கு 15 அடி சென்டி மீட்டர் அளவுள்ள சட்டத்திற்குள் ஓவியமாக வரைந்து விடுகிறார் பேராசிரியை சௌமியா. இதனையடுத்து சௌமியாவின் இந்த முயற்சிக்கு அவரது தாயார் தன்னால் இயன்ற உதவிகளை செய்து தருவதாக தெரிவித்துள்ளார். மேலும் சௌமியாவின் இந்த புதிய முயற்சியின் மூலம் திருக்குறளை காதுகேளாத மாணவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. இவர் ஒரு ஓவியம் தீட்ட 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகிறது. இதனால் ஒரு நாளைக்கு ஒரு ஓவியம் தீட்டுகிறார். ஜனவரி 1ம் தேதி முதல் ஓவியம் வரைய தொடங்கிய இவர் 2023 ஆகஸ்ட் 23ம் தேதிக்கு 1330 குரலையும் ஓவியமாக வரைந்து விடுவதையே இலக்காக கொண்டுள்ளார். இந்நிலையில் குழந்தைகளுக்கு அறத்தை சொல்லித்தர திருக்குறள்தான் சிறந்த வழியென்று சொல்லும் இயல் பெற்றோர்கள் திருக்குறை கற்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews