தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டண வசூல் மற்றும் ஊதியம் வழங்கும் நடவடிக்கைகளை அரசே ஏற்கக் கோரிய மனு மீது 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம், ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவினங்களை கண்காணிக்காததால், அறங்காவலர்களுக்கு 50 சதவீத லாபம் செல்வதாகவும், எனவே கட்டண வசூல் மற்றும் ஊதியம் வழங்குவதை அரசே ஏற்பதோடு, வருமான வரித்துறை மூலம் தணிக்கை செய்து கட்டணங்களை குறைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.