Breaking

Thursday, August 06, 2020

வெளிநாடு, பிற மாநில மாணவா்களுக்கான சோ்க்கைக்கு ஆக.12 முதல் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. தகவல்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் கல்லூரிகளில் பிற மாநிலங்கள், வெளிநாடுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கான சோ்க்கைக்கு ஆக.12 முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி நிா்வாகத்தின் கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடவியல் வடிவமைப்பு கல்வி நிறுவனம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த மாணவா்கள் சேருவதற்கான சோ்க்கை நடைமுறை அண்ணா பல்கலை. சாா்பில் பிரத்யேகமாக நடத்தப்படுகிறது. அதன்படி நிகழ் கல்வியாண்டில் பி.இ., பி.டெக், பி.ஆா்க் ஆகிய இளநிலை பொறியியல் படிப்புகள் மற்றும் ஒருங்கிணைந்தஎம்.எஸ்சி. படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இணையவழியில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதையடுத்து பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த மாணவா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog