அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்ட பிறகே ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆபாச இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை, ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை விதிக்கக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் ஜெ.ரவீந்திரன் உள்ளிட்ட வக்கீல்கள், இணையதள சேவை குறைபாட்டால் பெரும்பாலான நேரங்களில் உரிய நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. தொலைக்காட்சி மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மின்சார தட்டுப்பாட்டால் அதிலும் குளறுபடி ஏற்படுகிறது.
ஆன்லைன் வகுப்புகளுக்கு பதிலாக பாடத்திட்டத்தை பள்ளியின் இணைய தளத்திலோ அல்லது இ-மெயில் மூலமோ அனுப்பி மாணவர்களை படிக்க வைக்கலாம். அல்லது ஏற்கனவே ஆசிரியர்கள் பாடம் நடத்தி பதிவு செய்த வீடியோக்களை போட்டு காண்பிக்கும் வழிவகையை பின்பற்றலாம். ஊரடங்கால் வருமானம் இழந்துள்ள சூழலில், ஆன்லைன் வகுப்புகளுக்கு என பெற்றோர் மாதம் ஒன்றுக்கு 2,500 ரூபாய் செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன், டிஜிட்டல் வழி கல்வியை நோக்கி பயணிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கு எந்த ஒரு சுமையும் ஏற்படாது எனவும் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups