அரசாணை (நிலை) எண். 81 - நாள். 10.08.2020 - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பணிபுரியும் 544 பகுதி நேர தொகுப்பூதியத் துப்புரவு பணியாளர்களை முழுநேர துப்புரவு பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 17, 2020

Comments:0

அரசாணை (நிலை) எண். 81 - நாள். 10.08.2020 - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பணிபுரியும் 544 பகுதி நேர தொகுப்பூதியத் துப்புரவு பணியாளர்களை முழுநேர துப்புரவு பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பணிபுரியும் 544 பகுதி நேர தொகுப்பூதியத் துப்புரவு பணியாளர்களை முழுநேர துப்புரவு பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிநது துறை
அரசாணை (நிலை) எண். 81
நாள். 10.08.2020
சார்வாரி வருடம், ஆடி 26 ஆம் நாள், திருவள்ளுவர் ஆண்டு 2051.
படிக்கப்பட்டது :
ஆதிதிராவிடர் நல ஆணையரின் கடித எண். த4/11214/2017, நாள் 03.10.2017, 04.02.2020 மற்றும் 19.04.2020
ஆணை :
2020-2021ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தில் "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் ரூ.3000/- தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த 651 பகுதி நேர துப்புரவுப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, ரூ.6300/- அடிப்படை ஊதியம் பெறும் வகையில் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள்" என மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்பு செய்யப்பட்டது. 2. மேலே படிக்கப்பட்ட தனது கடிதங்களில் ஆதிதிராவிடர் நல ஆணையர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.3000/- மட்டுமே வழங்கப்படுகிறது எனவும், மேற்படி தொகையினைக் கொண்டு அவர்கள் வாழ்க்கை நடத்திட மிகவும் சிரமமாக உள்ளதாலும், இது பகுதி நேர பணி என்பதாலும் அவர்கள் இப்பணியை துறந்துவிட்டு கூடுதலாக வருமானம் உள்ள தொழிலுக்கு சென்றுவிடும் நிலை ஏற்படுகிறது எனவும், இந்நிலையில், மேற்படி பணியிடங்கள் காலியாகவே இருக்க நேரிடுவதோடு, அனைத்து விடுதிகளும் சுத்தமாக வைத்திருந்து மாணவ மாணவியர்களுக்கு எவ்வித தீங்கும் நேரா வண்ணம் பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட வழிவகுக்கும் என்பதாலும், இத்துறை விடுதிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கும், சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டியும் மேற்கண்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாகவும் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளார். 3. ஆதிதிராவிடர் நல ஆணையரின் கருத்துரு அரசால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டது. பரிசீலனைக்குப்பின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவியர்களின் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டும், விடுதிகளை தூய்மையாக பராமரிப்பதன் அவசியத்தினை கருதியும் துப்புரவாளர் பணியிடம் இன்றியமையாதது என கருதப்படுவதால், ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தொகுப்பூதியத்தில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணி முடித்த 544 துப்புரவு பணியாளர்களை இவ்வாணை வெளியிடப்படும் நாள் முதல் முழு நேர துப்புரவு பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் (Special Time scale of Pay) நிலை-2 ரூ.4100 - ரூ.12500 என்ற ஊதியத்தில் நிர்ணயித்து அரசு ஆணையிடுகிறது.
4. மேலே பத்தி 3-இல் ஒப்பளிக்கப்பட்ட இச்செலவினம் கீழ்க்கண்ட கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும். 2225- ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் - 01 - ஆதிதிராவிடர் நலன் 277 கல்வி மாநில செலவினங்கள் - AE மாணவர் இல்லங்கள் - 301 சம்பளங்கள் (IFHRMS 2225-01-277-AE-30100) (த.தொ .கு 2225-01-277-AE- 0109)
5. மேலே பத்தி 3-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தை பெற்று வழங்கிட ஆதிதிராவிடர் நல ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இப்பணியிடங்களில் அரசுக்கு பரிந்துரைத்த இணைப்பில் உள்ள துப்புரவு பணியாளர்களை பணியமர்த்துமாறு ஆதிதிராவிடர் நல ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
6. இவ்வாணை நிதித்துறையின் இசைவினை அதன் கோ.எண். 22909/ நிதித் (ஆதி(ம)பந) துறை, நாள்.24.07.2020 மற்றும் அ.சா.எண்.24681/ நிதி (மை.ம.ஆ.பி)/2020, நாள். 29.07.2020 இல் பெற்று வெளியிடப்படுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
சோ.மதுமதி, அரசு செயலாளர் (மு.கூ.பொ). பெறுநர்
ஆணையர், ஆதிதிராவிடர் நலம், சென்னை - 600 005.
இயக்குநர், பழங்குடியினர் நலம், சென்னை - 600005.
அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள்,
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநில கணக்காயர், சென்னை - 600 018/35.
சம்பளக் கணக்கு அலுவலர் (கிழக்கு), சென்னை - 600 008.
உள்ளுறை தணிக்கை அலுவலர் (G&SSA), சென்னை - 600 009.
நகல் : முதலமைச்சர் அலுவலகம், சென்னை - 600009.
நிதித் (ஆதி(ம்)பநிமை.ம. ஆ.பி) துறை, சென்னை - 600009.
மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்) அவர்களின் சிறப்பு நேர்முக உதவியாளர், சென்னை - 600009.
அரசு கூடுதல் தலைமைச் செயலர் அவர்களின் தனிச்செயலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சென்னை - 600009
இருப்புக் கோப்பு உபரி நகல் //ஆணைப்படி அனுப்பப்படுகிறது// 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews