Breaking

Saturday, August 01, 2020

33 வருடங்களுக்கு பிறகு 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி: 51 வயது முதியவர் மகிழ்ச்சி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
33 ஆண்டுகளுக்கு பிறகு 10-–ம் வகுப்பு தேர்வில் தெலுங்கானாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தேர்ச்சியடைந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் நடைபெறவில்லை. அனைத்து மாநிலங்களும் 10–-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ‘ஆல் பாஸ்’ என அறிவித்தன. அதே நேரத்தில், 33 ஆண்டுகளாக ஆங்கிலத்தில் பெயிலாகி வந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 51 வயது நபர், இந்த கொரோனாவால் ‘ஆல் பாஸ்’ ஆகி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நூருதீன் (வயது 51). இவர் கடந்த 1987–-ம் ஆண்டு 10-–ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத தொடங்கினார். அப்போது எழுதிய தேர்வில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் விடாமுயற்சியாக விண்ணப்பித்து தேர்வு எழுதி வந்தார். பாசாவதற்கு தேவையான 35 மார்க்குக்கு பதிலாக 33, 34 என பெற்று தோல்வியையே தழுவி வந்தார். இதற்கிடையே, இந்தாண்டும் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்த போது அனைத்துப் பாடங்களையும் எழுத வேண்டும் என அதிகாரிகள் கூறிவிட்டனர். அதனை ஏற்று அனைத்துப் பாடங்களுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் செலுத்தி விட்டு தேர்வு எழுதும் தேதிக்காக காத்திருந்தார். ஹால்டிக்கெட்டும் வந்து விட்டது. தேர்வு எழுதவும் தயாராக இருந்தார். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் அனைவரும் பாஸ் என தெலுங்கானா அரசு அறிவித்தது. இதையடுத்து, நூரூதினும் ‘ஆல் பாஸ்’ ஆகிவிட்டார். இதனையடுத்து அவர் முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கு நன்றி என கூறியுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog