படைப்பணியின்போது போரில் உயிர்நீத்த படைவீரர், முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்களின், பத்து முதல், 12 வயது, 13 முதல், 15 வயது, மற்றும், 15 முதல், 16 வயது வரையுள்ள, ஆண் சிறார்களை (போரில் உயிர்நீத்த படைவீரர்களின் சிறார்களுக்கு வயது வரம்பு, ஆறு மாதங்கள் தளர்வு செய்யப்பட்டுள்ளது.)
இமாசல் பிரதேசத்தில் உள்ள சைல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டோல்பூர் மற்றும் அஜ்மீர், கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு மற்றும் பெல்காம் ஆகிய இடங்களில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவ பள்ளியில், ஜன., 2021ல், முறையே, 6, 9 மற்றும் பிளஸ் 1 சேர்க்கைக்கான எழுத்துத்தேர்வு, வரும் டிசம்பரில் நடக்க இருக்கிறது. இப்பள்ளியில் சேர, 5, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தற்போது பயின்று வரும் மாணவர்கள், தகுதியுடையவர்கள். பிளஸ் 1ல் சேர, பத்தாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வர்.
விருப்பமும், தகுதியும் உள்ள ஆண் சிறார்கள், விண்ணப்பமும், விளக்கவுரையும் பெற, நேரடியாக இதர வகுப்பினர், 600 ரூபாய், எஸ்.சி. மற்றும் எஸ்.டி பிரிவினர், 300 ரூபாய் செலுத்தி, ஏதாவது ஒரு ராஷ்ட்ரிய ராணுவப் பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது எழுத்து மூல விண்ணப்பம், சுய முகவரியிட்ட துண்டு சீட்டுடன், இதர பிரிவினர், 650 ரூபாய், எஸ்.சி. மற்றும் எஸ்.டி., பிரிவினர், 350 ரூபாய் செலுத்தி, ரூ.350ம் செலுத்தி “Princiapl, RMS' என்ற பெயரில், வங்கி வரைவோலை எடுத்து, தங்களது சிறார்களை சேர்க்க விரும்பும் பள்ளியின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், செப்., முதல், அக்., வரை அனுப்ப வேண்டும். அதற்கு, கட்டணம் மற்றும் இடஒதுக்கீடு விபரங்களுக்கு, www.rashtriyamilitaryschools.in என்ற இணையதளம் மற்றும் நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286 233079 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.