CBSE 2020 Syllabus: சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் 30% குறைக்கப்பட்டது ஏன்? - மத்திய அமைச்சர் விளக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 09, 2020

Comments:0

CBSE 2020 Syllabus: சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் 30% குறைக்கப்பட்டது ஏன்? - மத்திய அமைச்சர் விளக்கம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பாடத்திட்டம் குறைக்கப்பட்டது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம் தெரிவித்துள்ளார்
கொரோனா பாதிப்பிற்கு கல்வித்துறையும் மிஞ்சவில்லை. புதிய கல்வியாண்டு தொடங்கிய நிலையில் பள்ளிகள் திறக்கப்படாத சூழல் தொடர்கிறது. இதனால் மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் பாடத்திட்டத்தை 30 சதவீதம் குறைக்க சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. அதன்படி பல்வேறு பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தான் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அதாவது கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம் போன்ற பாடங்களை குறைத்திருப்பதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘மதச் சார்பின்மை’ என்ற வார்த்தையே பாடத்திட்டத்தில் இடம்பெறக் கூடாது என்று பாஜக அரசு திட்டமிட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இதற்கு குறிப்பிட்ட பாடங்களை எடுத்துக் கொண்டு தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததன் விளைவே காரணம். இதுபற்றி சிபிஎஸ்இ தரப்பு தெளிவான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி-யின் மாற்று கல்வியாண்டு கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ள அனைத்து பாடங்களும் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தில் தேர்வை மனதில் வைத்து ஒருமுறை மட்டும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரே நோக்கம் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதே ஆகும். வேறு உள்நோக்கமில்லை. கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு நிபுணர்களின் ஆலோசனையை பின்பற்றியே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. தேசியம், உள்ளாட்சி நிர்வாகம், கூட்டாட்சி போன்ற ஒருசில பாடங்களை மட்டும் கையிலெடுத்துக் கொண்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கை அனைத்து பாடத்திட்டங்களிலும் எடுக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு * பொருளாதார பாடம்
Measures of Dispersion, Balance of Payments Deficit
* இயற்பியல்
Heat Engine & Refrigerator, Heat Transfer, Convection & Radiation * கணிதம்
Determinants, Consistency, Inconsistency, and Number of Solutions of System of Linear Equations by Examples and Binomial Probability Distribution
* உயிரியல்
Mineral Nutrition, Digestion & Absorption
உள்ளிட்ட பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. எனவே குறுகிய எண்ணத்துடன் பார்க்க வேண்டாம். எனது தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறேன். குழந்தைகளுக்கு தேவையான கல்வியை அளிப்பது நமது கடமை. இதில் அரசியல் செய்ய வேண்டாம். கல்வியில் அரசியல் செய்வதை விட்டு விட்டு, நமது அரசியலில் அதிக கல்வியை புகுத்துவோம் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews