அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகளில் பாடங்களை பதிவேற்றும் பணி தீவிரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 23, 2020

Comments:0

அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகளில் பாடங்களை பதிவேற்றும் பணி தீவிரம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளில் பிளஸ்-2 பாடங்களை பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு விதிமுறைகள் அமலில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வரும் நிலையில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்பிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 108 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 12,284 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 படித்து வருகிறார்கள். இந்த மாணவ-மாணவிகளுக்கு தமிழகஅரசின் சார்பில் ஏற்கனவே விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகள் அவர்களது வீட்டில் இருந்தே படிப்பதற்கு வசதியாக அவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினியில் பிளஸ்-2 பாடங்களை பதிவேற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளுக்கு அரசால் வழங்கப்பட்ட மடிக்கணினிகளை அந்தந்த பள்ளிகளுக்கு கொண்டு வந்து பாடங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று தர்மபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியில் பிளஸ்-2 பாடங்களை பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கான மடிக்கணினியில் பிளஸ்-2 பாடங்கள் பதிவேற்றம் செய்யும் பணியினை பள்ளி தலைமை ஆசிரியை தெரசாள் தொடங்கி வைத்தார். மடிக்கணினி பயிற்றுனர்கள் துணையுடன் பாடங்களை பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பிளஸ்-2 பாடங்களை தங்களது மடிக்கணினியில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே விலையில்லா பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews