நாமக்கல் மாவட்டத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச சீருடை தைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய இரண்டு மாவட்ட கல்வி அலுவலகமும், 15 வட்டார கல்வி அலுவலகமும் இயங்கி வருகின்றன.
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து மதிய உணவு சாப்பிடும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டிற்கு நான்கு பருவ இலவச சீருடை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான சீருடைகளை மாணவ, மாணவிகளின் அளவிற்கேற்ப தைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் இயங்கும் வேலூர் மகளிர் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் சீருடைகள் தைக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், இங்கு கோஆப்டெக்ஸ் மூலம் சீருடைக்கான துணிகள் வந்துள்ளது. இதனை இச்சங்கத்தில் உள்ள 1450 உறுப்பினர்களுக்கும் வெட்டி கொடுக்கப்படுகிறது. இவர்கள் அதனை பெற்று சென்று வீட்டில் வைத்து சீருடைகளை தைத்து சங்கத்தில் ஒப்படைத்து வருகின்றனர். தற்போது, முதல் பருவ சீருடை துணிகள் வந்துள்ளதால் அதனை மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் பெறப்பட்ட மாணவர்களின் அளவுகளின்படி சீருடை துணிகளை வெட்டி சங்க உறுப்பினர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இவர்கள் சுமார் 45 நாட்களில் தைத்து சங்கத்தினரிடம் ஒப்படைப்பர். வழக்கமாக பரமத்தி வேலூரில் உள்ள சங்க அலுவலகத்தில் உறுப்பினர்கள் தாங்கள் தைக்கும் துணிகளை பெற்றுச்செல்வார்கள். தற்போது, கொரோனா நோய் பரவல் காரணமாக, நாமக்கல் கோட்டை நகராட்சி துவக்கப்பள்ளியில் வைத்து சீருடை துணிகள் உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல், அந்தந்த வட்டார கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளிலேயே சீருடை தைக்கும் உறுப்பினர்களிடம் துணிகள் வழங்கப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.