ஹரியானாவில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து..!
கொரோனா பரவலை முன்னிட்டு ஹரியானா மாநிலத்தில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளின் மாணவர்கள் வருகைப் பதிவேடு மற்றும் முந்தைய செமஸ்டர் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அறிவித்தார்.
முன்னதாக, ஹரியானா உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித் துறை இறுதி செமஸ்டர்களின் அனைத்து முனைய தேர்வுகளும் ஜூலை 1 முதல் 31 வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த டெல்லி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.