எச்சரிக்கை... இந்த செயலிகள் எல்லாம் உங்க மொபைலில் இருக்கா? மிகவும் ஆபத்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 18, 2020

1 Comments

எச்சரிக்கை... இந்த செயலிகள் எல்லாம் உங்க மொபைலில் இருக்கா? மிகவும் ஆபத்து

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியா - சீனா மோதலை அடுத்து சமூக வலைத்தளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனவும், சீன செயலிகளை பயன்படுத்தக்கூடாது எனவும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 52 சீன செயலிகளை நீக்க வேண்டும், அல்லது புறக்கணிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த செயலிகள் மூலம் இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம் சென்றுகொண்டிருப்பதாகவும், அதன்மூலம் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கை சீன மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே டிக்டாக், யுசி புரோசர், ஹலோ சாட், பப்ஜி கேம், ஷேர் ஹிட், சென்டெர், பியூட்டி ப்ளஸ், கிளின் மாஸ்டர், ஜூம் விடியோ மீட்டிங் உள்ளிட்ட செயலிகளை புறக்கணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஜூம் செயலி மூலம் வீடியோ மீட்டிங் நடத்துவதினால், இந்தியர்கள் கண்காணிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த செயலிகளால் இந்தியாவின் பாதுகாப்புத் தன்மைக்கு பாதகம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், பயன்பாட்டாளர்கள் இதனை நீக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பற்றது என்ற வகையில் ஜூம் செயலியை தைவான், ஜெர்மன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட செயலிகள் மூலம் சீனா, பயன்பாட்டாளர்களின் தகவலைக் கொண்டு உளவு பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடன் தொடர்புடைய, 'டிக் டாக்' உட்பட, 52 'மொபைல்' செயலிகளை முடக்க, மத்திய அரசுக்கு, இந்திய புலனாய்வு அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.இந்தியா சீனா இடையே, கடந்த சில நாட்களாக எல்லையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதையடுத்து, இந்திய அரசு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்திய புலனாய்வு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு ஒரு பரிந்துரையை முன்வைத்துஉள்ளன. சீனாவுடன் தொடர்புடைய மொபைல் செயலிகளை, இந்தியாவில் முடக்க வேண்டும் என்றும், அந்த செயலிகளை பயன்படுத்தக்கூடாது என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என்றும், கோரியுள்ளது. இதன்படி, 'ஜூம், டிக் டாக், யு.சி., பிரவுசர், ஷேர் இட், கிளீன் மாஸ்டர்' உள்ளிட்ட, 52 செயலிகளை முடக்கவேண்டும் என புலனாய்வு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.இந்த செயலிகள், நாட்டின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், புலனாய்வு நிறுவனங்களின் இந்த பரிந்துரைக்கு, தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆதரவு அளித்துள்ளது. இதையடுத்து, செயலிகளை முடக்குவது தொடர்பாக அரசு அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.ஒவ்வொரு செயலியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தடை செய்வது குறித்து, மத்திய அரசு முடிவு எடுக்கும் என, கூறப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. WhatsApp,facebook,instagram,hike irruntha more then better

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews