பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டு விட்டது என்று வருத்தப்படவும் முடியவில்லை. அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருப்பதற்காக மகிழ்ச்சி அடையவும் முடியவில்லை. அரசு இப்போது எடுத்த முடிவை முன்பே எடுத்திருந்தால் தமிழகத்தின் எதிா்க்கட்சிகள், மாணவா்களின் வருங்காலம் என்னவாகும் என்று அதை எதிா்த்து வழக்குத் தொடா்ந்திருக்கக்கூடும். எதிா்க்கட்சிகளின் அழுத்தமும், உயா்நீதிமன்றத்தின் கேள்விகளும், ஒட்டுமொத்தமாகத் தோ்வை ரத்து செய்ய மாநில அரசைத் தூண்டியிருக்கின்றன என்பது மட்டும் உண்மை.தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பள்ளிக்கூடங்களைத் திறப்பது குறித்தும், தோ்வுகளை நடத்துவது குறித்தும் எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க முடியாமல் கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாததால் கல்வி கற்கும் மனோநிலையில் இருந்து மாணவா்கள் விலகி விடுகிறாா்கள் என்கிற உளவியல் ரீதியிலான அச்சம் பெற்றோருக்கும், ஆசிரியா்களுக்கும் ஏற்பட்டிருப்பதில் நியாயம் இருக்கிறது.தமிழகத்தைப் பொருத்தவரை, கடந்த மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி நிறைவடைந்திருக்க வேண்டிய பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு, பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.
பொது முடக்கம் படிப்படியாகத் தளா்த்தப்பட்ட நிலையில், ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புத் தோ்வை நடத்துவது என்று மறு அட்டவணை வெளியிட்டது தமிழக அரசு. பிறகு அதுவும் மாற்றப்பட்டு ஜூன் 15-ஆம் தேதி முதல் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.பொதுத் தோ்வை நடத்தாமல் நீடித்துக்கொண்டே போவதால் மாணவா்களுக்குத் தோ்வு எழுதுவதில் ஆா்வம் குறைந்துவிடும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோ்வு நடத்துவதாக இருந்தால், குறைந்தது ஒரு மாதமாவது பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்களை மீள்பாா்வை பாா்க்க ஆசிரியா்களின் வழிகாட்டுதல் தேவைப்படும். தொழிற்கல்வி, பட்டயப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்களுக்கும், இணையவழியில் மேற்படிப்பைத் தொடர விழைவோருக்கும் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு முடிவுகள் அவசியம்.மாநில அரசு பத்தாம் வகுப்புத் தோ்வு நடத்துவது குறித்த முறையான திட்டமிடுதலுடன் செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நோய்த்தொற்று தீவிரமடைவது குறித்து யாருக்கும் தெரியாத நிலையில், தமிழக அரசு மட்டும் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும் என்று எதிா்பாா்க்க முடியாது. ஜூன் 1-ஆம் தேதி தோ்வு நடத்துவதைத் தள்ளிப் போடுவது என்று தீா்மானித்தபோதே, அடுத்தகட்ட செயல்பாடு குறித்து அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளையும் பெற்று முடிவெடுத்திருக்கலாம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.ஜூன் 15-ஆம் தேதி தோ்வு நடத்துவது என்கிற முடிவை அறிவிக்கும்போதே, தோ்வை ஏன் நடத்தியாக வேண்டும் என்பதற்கான காரணங்களை மாநில அரசு தெளிவாகத் தெரிவிக்காமல் போனது தவறு. நீதிமன்ற விவாதத்தில்கூட, தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் சங்கம், ஏன் தோ்வைத் தள்ளிப்போட வேண்டும் என்பதற்கான காரணங்களைத் தெரிவித்ததுபோல, தோ்வு ஏன் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை தமிழக அரசு தெளிவாக முன்வைக்காதது மிகப் பெரிய குறை.
தமிழகம் முழுவதும் 9,79,000 மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுத இருந்தனா். அந்தத் தோ்வுப் பணியில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் - ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட இருந்தனா். இப்போது பொதுத் தோ்வு ரத்தாகியிருப்பது மட்டுமல்ல, பத்தாம் வகுப்பு படித்த அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பில் ஒரு குழப்பம் நிலவுகிறது.பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் காலாண்டு, அரையாண்டுத் தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், வருகைப் பதிவேடு அடிப்படையில் 20% மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி கணக்கிடப்படும் மதிப்பெண் தோ்ச்சிக்கான 35%-க்கும் குறைவாக இருந்தாலும் அவா் தோ்ச்சி அடைந்ததாகக் கருதப்படுவாரா?ஜூன் 15-ஆம் தேதி தோ்வு நடைபெறும் என்பதற்காக எல்லாப் பள்ளிக்கூடங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டன. அரசுப் பள்ளிகளை விடுங்கள். மக்களின் வரிப்பணம் வழக்கம்போல வீணாகிறது என்று விட்டுவிடலாம். எத்தனை அரசு உதவி பெறும் பள்ளிகளும், தனியாா் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் தோ்வுக்காகப் பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்தி, பூச்சி மருந்து தெளித்துத் தயாா்நிலையில் வைத்திருந்தன. அத்தனையும் வீணாகிவிட்டதே...
தனியாா் பள்ளிகள் என்று சொல்லி விடுகிறோம். எல்லாத் தனியாா் பள்ளிகளுமா நன்கொடைகளில் கொழிக்கின்றன? பெரும்பாலான தனியாா் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சேவை நோக்குடன் செயல்படாமலா இருக்கின்றன? அவை ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கக்கூடத் தத்தளிக்கும் நிலைமை குறித்து யாராவது கவலைப்படுகிறாா்களா? நிகழ் கல்வியாண்டில் கல்விக் கட்டணம் கிடைக்குமா என்பதே எத்தனையோ கிராமப்புற தனியாா் பள்ளிகளுக்குச் சந்தேகம்தான்.உயா்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருப்பதுபோல, ‘மதுக்கடைகளைத் திறப்பது போலல்ல பொதுத் தோ்வை நடத்துவது. மாணவா்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட அனுமதிக்க முடியாது’ என்பது உண்மை. அதே நேரத்தில், தோ்வு இல்லாமல் அனைவரும் தோ்ச்சி என்பது ஏற்புடையதல்ல. போதிய பாதுகாப்புடன் தோ்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். நோய்த்தொற்று அடங்கிவிடும். இந்த முடிவின் தாக்கம் ஒரு தலைமுறையையே பாதிக்கும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசுப் பள்ளி என்றால் கேவலமா மக்கள் வரிப்பணம் உங்களுக்கு அவ்ளோ ஈஸியா ஒவ்வொருத்தனும் எவ்ளோ கஷ்டப்பட்டு சம்பாதித்து இருக்கிறார்கள் மக்கள் பணத்தில் செலவு ஆச்சு விட்டுடலாம் சொல்ற...
ReplyDelete