கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும் என பெற்றோருக்கு தகவல் அனுப்பிய பள்ளிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 5-வது இடத்தில உள்ளது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இதனால், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இதனால் மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.தமிழக அரசும் யாரிடமும் வாடகை வசூலிக்க கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து, தனியார் பள்ளி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தனியார் பள்ளிகள் ஜூன் மாதம் வாங்க வேண்டிய கட்டணத்தை தற்போது வாங்க கூடாது என்றும் மீறினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் பள்ளிகளை முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்கவும், முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தினால், கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும் என பெற்றோருக்கு தகவல் அனுப்பிய பள்ளிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். கோவையில் ஒரு பள்ளி, சென்னையில் 3 பள்ளிகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. மேலும் கொரோனா காலத்தில் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது என ஏற்கெனவே அரசு உத்தரவிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.