சீனாவின் ஹூவாய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரம்
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 33 லட்சத்து 70 ஆயிரத்து 953 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 20 லட்சத்து 62 ஆயிரத்து 171 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெறுவர்களில் 49 ஆயிரத்து 975 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 லட்சத்துக்கு அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்
அதேபோல், வைரஸ் பரவியவர்களில் 10 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். இருப்பினும் கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 2 லட்சத்து 38 ஆயிரத்து 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் எண்ணிக்கை
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் எண்ணிக்கை குறித்து பார்க்கையில் அமெரிக்கா 64,942, ஸ்பெயின் 24,824, இத்தாலி 28,236, இங்கிலாந்து 27,510, பிரான்ஸ் 24,594, ஜெர்மனி 6,662, ஈரான் 6,091, பிரேசில் 6,017 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பில் கேட்ஸ் தனது யூடியூப் பக்கத்தில் கொரோனா வைரஸிற்கு அவரது நிறுவனம் எந்த வகையான ஆண்டிபாடிகளை உருவாக்கி வருகிறது எனும் வகையான வீடியோவை பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவில் பில் கேட்ஸ் கூறியது குறித்து பார்க்கலாம்.
வைரஸின் தாக்கத்தை குறைக்க போராடி வருகிறது
இந்த உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க போராடி வருகிறது. இதற்கு ஒரே தீர்வு கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிப்பதாகும். நாம் கண்டுப்பிடிக்கும் தடுப்பு மருந்து, நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டும் படியாக இருக்க வேண்டும் என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
உடல்களில் நுழைந்து பில்லியன் கணக்கான நகல்கள் உற்பத்தி
அதேபோல் இந்த வீடியோவில் செயல்முறை விளக்கம் குறித்தும் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் ஸ்பயிக் ப்ரோட்டின் உடல்களில் நுழைந்து பில்லியன் கணக்கான நகல்களை உற்பத்தி செய்யும். இந்த செல்கள் நமது நுரையீரலுக்கு சென்று சில நாட்களில் அந்த வைரஸின் தாக்கம் தொடர்கிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.