👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக, விடைத்தாள் கட்டுகளை, தேர்வு மையங்களுக்கு அனுப்ப, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் முடிந்து விட்டன. பிளஸ் 1ல், ஒரு பாடத்துக்கு மட்டும், தேர்வு நடத்த வேண்டி உள்ளது.தேர்வு முடிந்த பாடங்களுக்கான விடைத்தாள்கள், ஒவ்வொரு மாவட்டங்களிலும், சில பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளன.இந்த பள்ளிகள் கட்டுக்காப்பு மையங்களாக நிர்ணயிக்கப்பட்டு, கேமரா கண்காணிப்பு மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.இங்கு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில், ஆசிரியர்கள், பள்ளி கல்வி அதிகாரிகள் மற்றும் போலீசார், பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் பணிகளை துவங்க, அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். வரும், 27 முதல், விடைத்தாள் திருத்தம் துவங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு துவங்கிஉள்ளது. ஒவ்வொரு கட்டுக்காப்பு மையங்களில் இருந்தும், விடைத்தாள்கள், விடை திருத்தும் மையங்களுக்கு அனுப்பப்பட உள்ளன.வரும், 19 முதல், போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டு, விடை திருத்தும் மையங்களில் வைக்கப்பட உள்ளன.அங்கு விடைத்தாள்கள் கலைக்கப்பட்டு, யாருடைய விடைத்தாள்கள் எங்கே உள்ளன என, அடையாளம் தெரியாத வகையில், அவற்றை கையாள, மாவட்ட கல்வி அதிகாரி களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.