விவசாய கூலி தொழிலாளர்கள், சிறு தொழில் செய்பவர்கள், பட்டாசு மற்றும் தீப்பட்டி தொழிலாளர்கள், நெசவாளர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் கூலி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், மீனவர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள என விழிப்பு நிலை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து தமிழக அரசு அரிசி அட்டை தார்கள் அனைவருக்கும் ரூ.1000 நிவாரணம் அளித்து உதவியது. அத்துடன் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சீனி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைம் விலை இல்லாமல் அளித்தது. தொடர்ந்து மே மாதத்திற்கு உணவு பொருட்களை விலைஇல்லாமல் அளித்தது. தற்போது ஜுன் மாதத்திற்கும் விலை இல்லாமல் உணவு பொருட்களை விநியோக்க முடிவு செய்துள்ளது.
ரேஷன் அடைக்கு
இந்நிலையில் ரேஷன் அட்டை தார்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள், மீனவர்கள் நலவாரியத்ததில் பதிவு செய்தவர்கள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள், வணிகர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள், பழங்குடியினர் நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள், நறிகுறவர்கள், பூசாரிகள், காதி தொழிலாளர்கள், திருநங்கைகள், சலவை தொழிலாளர்கள், உள்பட பல்வேறு 14 வகையான தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம் அறிவித்து வழங்கியது.
இந்நிலையில் தமிழக அரசு மீண்டும் 14 வகையான பல்வேறு நலவாரிய தொழிலாளர்களுக்கு மீண்டும் ரூ.1000 நிவாரணத்தை அறிவித்துள்ளது. இதன்படி மீனவர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த 485000 பேருக்கும், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியத்தில் உள்ள 59100 பேருக்கும், பழங்குடியினர் நலவாரியத்தில் உள்ள 46979 பேருக்கும், நாட்டுப்புற கிராமிய கலைக்குழுவினர் 37385 பேருக்கும், பூசாரிகள் நலவாரியத்தில் உள்ள 33 627பேருக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.