நேற்றைய நிகழ்ச்சியில், விண்வெளியின் அமைப்பு, அதன் அதிசயங்கள், விஞ்ஞானியாக தேவையான தகுதிகள், விண்வெளி அறிவியல் சார்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் மற்றும் வாய்ப்புகள் ஆகியவை குறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை விரிவாக விளக்கம் அளித்தார். தொடர்ந்து, இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் (ஐ.ஓ.டி.,) மற்றும் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (ஏ.ஐ.,) துறைகளில் உள்ள ஏராளமான வாய்ப்புகள், அனைத்து துறைகளிலும் ஏ.ஐ.,யின் அளப்பரிய பங்கு குறித்து அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பேராசிரியர் ஸ்ரீராம் வாசுதேவன் பேசினார். தொடர்ந்து, கோவிட்-19க்கு பின் வேலைவாய்ப்புகள் குறித்து பேசிய பொருளாதார நிபுணர் சத்யகுமார், “ஆன்லைன், சோசியல் மீடியா, மருத்துவம், டேட்டா சயின்ஸ் உட்பட பல்வேறு துறைகளில் வரும்காலத்தில் வேலை வாய்ப்புகள் உருவாகும்'' என்றார்.
இன்றைய நிகழ்ச்சியில், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் குறித்து, அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பேராசிரியர் கோபாலகிருஷ்ணன், சிகரம் தொடு தலைப்பில் தன்னம்பிக்கை பேச்சாளர் கோபிநாத், மீடியா புரொடக்சன் தலைப்பில் குட்டி பத்மினி ஆகியோர் நேரலையில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில், பங்குபெற மற்றும் வல்லுநர்களுடன் நேரலையில் இணைய www.kalvimalar.com இணையதளத்தில், பெயர், மொபைல் எண், இ-மெயில் முகவரி மற்றும் மாவட்டம் ஆகிய தகவல்களை அளித்து உடனே பதிவு செய்யலாம். வரும் 17ம் தேதி வரை தினமும் காலை 10 முதல் 12 மணிவரை இந்த நேரலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் 'பவர்டு பை ஸ்பான்சர்'களாக பங்கேற்கின்றன. வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி அண்டு அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனங்கள், இ-பாக்ஸ் காலேஜ்ஸ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்கள் உடன் வழங்குகின்றன. - நமது நிருபர் -
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.