அரசுப் பள்ளி மாணவர்கள் 180 பேருக்கு தலா ரூ.1,000 வழங்கிய மருத்துவர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 01, 2020

Comments:0

அரசுப் பள்ளி மாணவர்கள் 180 பேருக்கு தலா ரூ.1,000 வழங்கிய மருத்துவர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் தனது சொந்தப் பணத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.1.80 லட்சத்தை வழங்கினார். நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு காரணமாகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாங்கும் திறனும் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக ஏழை மக்களின் நிலை, சொல்லமுடியாத அளவுக்கு வறுமையுடன் இருக்கிறது. இதற்கிடையே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உள்பட ஏராளமான தன்னார்வலர்கள், தினக்கூலிப் பணியாளர்களுக்கு உதவி வருகின்றனர்.
ஏராளமானோர் உணவுப் பொருட்களையும் மருத்துவ உதவிகளையும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தில் பிறந்து வளர்ந்து, அரசுப் பள்ளியில் படித்து, இப்போது ஈரோடு கே.எம்.சி.எச். மருத்துவமனையின் தலைமை மருத்துவராக உள்ள என்.வி.மோகன் தான் படித்த பள்ளி மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள இரு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 180 பேருக்கு தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நத்தக்காட்டுவலசு அரசு தொடக்கப்பள்ளியில் தான் 5 ஆம் வகுப்பு வரை படித்தேன். அரசுப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதை அறிவேன். கிராமப் பெரும்பாலானவர்கள் கூலித் தொழிலாளர்கள், கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் வேலை இல்லாததால் உணவுக்கே கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த குடும்பங்களின் சிறு தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் இத்தொகையை வழங்கத் திட்டமிட்டேன்.அருகில் உள்ள சிங்காநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி, கோமயன்வலசு அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகையை வழங்கலாம் என்ற நண்பர்களின் ஆலோசனையை ஏற்று 3 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 180 மாணவர்களுக்கு தலா ரூ.1,000 உதவித்தொகையை வழங்கினேன் என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews