👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்'என, பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
அரசு பள்ளிகளில் ஓவியம், உடற்கல்வி, கணிப்பொறி, தையல் உள்ளிட்டவை கற்றுத்தர 15 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் பகுதி நேரமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ.7 ஆயிரத்து 700 வழங்கப்படுகிறது. இதை தவிர வேறு எவ்வித பணப்பலன்களும் கிடையாது.
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் கடந்த 2 மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. இதனால் பகுதி நேர ஆசிரியர்களுக்கு இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை. அதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பு செயலாளர் முருகேசன் கூறியது: பாடம் நடத்துவது மட்டுமின்றி மாணவர்கள், ஆசிரியர்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றுதல், வருகைப் பதிவு பதிவேற்றம், அரசின் திட்டங்களை மாணவர்களுக்கு பெறுவதற்கான அனைத்து கணினி வழித்தொடர்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிகள் இல்லாததால் அவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. ஆசிரியர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு 2 மாதத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து, உடனே ஊதியம் வழங்க வேண்டும், என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.