Search This Blog
Wednesday, May 06, 2020
3
Comments
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் ஊதியம் கல்வித்துறை உத்தரவு..
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோணா பாதிப்பால் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் பல தனியார் பள்ளிகள் ஊரடங்கு காரணம் காட்டி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது இல்லை என்ற புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
அதே போல சில இடங்களில் பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதாகவும் ஆசிரியர்களில் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர் .இதைத்தொடர்ந்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் தனியார் மழலையர் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் இது குறித்து சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளிடம் இருந்து தகவல்களை பெற்று அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.கரோனா தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் 3 ஆம் கட்டமாக மே 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தை குறைக்கும் நடவடிக்கை, பணியிலிருந்து நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாதெனவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், கடலூர் மஞ்சக்குப்பத்திலுள்ள (புனித.வளனார்) தனியார் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் திங்கள்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அதில், அப்பள்ளியின் சுயநிதிப் பிரிவில் 45 ஆசிரியர்களும், 10 அலுவலக பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கின் காரணமாக ஏப்ரல் மாதத்திற்கான ஊதியமாக 50 சதவீதம் மட்டுமே வழங்க முடியுமென நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், மாணவ-மாணவிகளிடமிருந்து 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான கல்விக்கட்டணம் முழுமையாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதனால், ஊரடங்கு இல்லாத நேரத்திலும் ஆசிரியர்களுக்கு முழுமையாக சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கஷ்டமான சூழலில் ஊதியக்குறைவு என்பதை மிகவும் வருத்தமான விஷயமாகும். எனவே, இதன் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து முழு சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.மேலும், இக்கல்வி நிறுவனத்தை நிர்வகித்து வரும் கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பு தனது கட்டுப்பாட்டிலுள்ள கடலூர், புதுச்சேரியிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் இதே நிலைப்பாட்டைத் தான் எடுத்துள்ளது. எனவே, இதன்
மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.
பின்னர், இக்கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். இதுகுறித்து கல்வியாளர்கள் தெரிவிக்கையில், மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் இதே நிலைப்பாடு தான் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களையும் உள்ளடக்கிய தனிக்குழுவை அமைத்து ஆராய வேண்டும். நெருக்கடியான சூழல்களில் கல்வி நிறுவனத்தை நடத்துபவர்கள் மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
PRIVATE
SALARY/INCREMENT
SCHOOLS
TEACHERS
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் ஊதியம் கல்வித்துறை உத்தரவு..
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் ஊதியம் கல்வித்துறை உத்தரவு..
Tags
# PRIVATE
# SALARY/INCREMENT
# SCHOOLS
# TEACHERS
TEACHERS
Labels:
PRIVATE,
SALARY/INCREMENT,
SCHOOLS,
TEACHERS
Subscribe to:
Post Comments (Atom)
Thanks for your educational information
ReplyDeleteThanks for your educational information
ReplyDeletethank u sir
ReplyDelete