மேகாலயாவில் செயல்பட்டு வரும் வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையத்தில் (NESAC) காலியாக உள்ள 21 ஆராய்ச்சியாளர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பொறியியல் படித்தவர்கள், முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலாண்மை : மத்திய அரசு
பணி : ஆராய்ச்சியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 21
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
ஆராய்ச்சியாளர் - 12
ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ - 9
கல்வித் தகுதி :
ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிப்போர், எம்.இ, எம்.டெக் அல்லது எம்.எஸ்சி துறையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், ஜியோசைன்ஸ், ரிமோட் சென்சிங், எரிகல், அட்மாஸ்பியரிக் சைன்ஸ், எர்த் சிஸ்டம் சைனஸ், கம்ப்யூட்டர் சைன்ஸ், சிவில் இன்ஜினியரிங், டேட்டா சைன்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் படித்திருக்க வேண்டும்.
வேளாண்மை, உயிரியல், சுற்றுச்சூழல் அறிவியல், ஃபாரஸ்டரி, ஜியோகிராபி, ஜியாலாஜி, ஜியோ இன்பார்மெட்டிக்ஸ், ரிமோட் சென்சிங், எகாலாஜி, எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், பிசிக்கல் சைன்ஸ் ஆகியவைடித்திருக்க வேண்டும்.
N-JET அல்லது GATE தகுதி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் :
ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ - மாதம் ரூ.31,000 வரையில்
ஆராய்ச்சியாளர் - ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில் ஊதியம் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் NESDR அமைப்பு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.