Breaking

Sunday, April 12, 2020

ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடிக்க பள்ளிகல்வி துறை உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் ஏப்ரல் மாத சம்பளத்தில், ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா நிவாரண பணிக்கு, நிதியுதவி தருமாறு, பொதுமக்களிடம் மத்திய - மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கையை ஏற்று, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் ஒரு நாள் ஊதியத்தை தர முன்வந்தனர். அதை அரசு ஏற்றுள்ளது. இதையடுத்து, இந்த மாதம் ஆசிரியர்கள் மற்றும் கல்வி துறை பணியாளர்களின் சம்பளத்தில், ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய, தமிழக பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். விருப்பம் உள்ளவர்களிடம் மட்டுமே, ஊதியம் பிடித்தம் செய்து பட்டியல் அனுப்ப வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா நிவாரண நிதியாக பள்ளிக்கல்வித்துறை உள்ள ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியார்களின் ஏப்ரல் மாத ஊதிய பட்டியலில் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்தல் தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog