Search This Blog
Saturday, April 25, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர்களின் போராட்டம் சமூகத்துக்கும், எதிர்கால சந்ததிக்கும் எதைச் சொல்கிறது. 6 நாட்கள் ஊதியப்பிடிப்பைக் கூட தாங்கமாட்டர்களா?:கேரள நிதியமைச்சர்
கேரள மாநிலத்தில் அரசுஊழியர்களி்ன் மாத ஊதியத்தில் 6 நாட்கள் தொகை 5 மாதங்களுக்கு பிடிக்கப்படும் என்ற உத்தரவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதறக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி முதல்வர் பினராயி விஜயன் ேதவையில்லாத செலவுகளைக் குறைக்க ேவண்டும் என்று கண்டித்துள்ளது.
ஏற்கனவே டேட்டா விவர பராமரிப்பை அமெரிக்க நிறுவனத்துக்கு ஒப்பந்தம் செய்த விவகாரத்தில் காங்கிரஸ்கட்சியும், பாஜகவும் கடுமையாக பினராயி விஜயனை விமர்சித்து வரும் நிலையில் இந்த விவகாரமும் சூட்டைக் கிளப்பியுள்ளது.
கரோனா வைரஸால் கேரள மாநிலம் அடைந்த பாதிப்பைச் சரிசெய்ய போதுமான நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசு சமீபத்தில் ஓர் உத்தரவை பிறப்பித்தது. இதன்படி கேரள மாநிலத்தில் மாதம் ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாக ஊதியம் வாங்குவோருக்கு 6 நாட்கள் ஊதியம் அடுத்த 5 மாதங்களுக்குப் பிடிக்கப்படாது. மாநில அரசு நிறுவனங்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு,தனியார்கூட்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளி்ட்டவற்றில் பணயியாற்றுவோருக்கு மட்டும் பிடிக்கப்படும்.
மேலும், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், வாரிய உறுப்பினர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், ஆணையங்களில் இருப்போர் ஆகியோரின் ஊதியம் 30 சதவீதம் பிடிக்கப்படும் எனத் தெரிவித்தது. அதேசமயம்முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை ஏற்கனவே அளித்தவர்களுக்கு இது பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டது.
கேரள அரசின் இந்த உத்தரவுக்கு ஆசிரியர்கள் சங்கம், காங்கிரஸ் ஆதரவு பெற்ற தொழிலாளர்கள் அமைப்பு போன்றவை எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் அளித்த பேட்டியில் முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “ முதலில் பினராயி விஜயன் அரசு தேவையில்லாத செலவுகளைக் குறைக்க வேண்டும். விஜயன் பங்கேற்கும் வாராந்திர தொலைக்காட்சி நிகழ்ச்சி வீண்.
அந்த நிகழ்ச்சிக்காக அரசுக்கு மாதத்துக்கு ரூ.6.37 கோடி செலவாகிறது. 5 ஆண்டுகளுக்கு ரூ.32 கோடி செலவாகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விளம்பரப்படுத்தும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி. அந்த கட்சிக்கு ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு ரூ.2.25 லட்சம் வழங்கப்படுகிறது. இதேபோன்ற நிகழ்ச்சியை காங்கிரஸ்முதல்வராக இருந்த உம்மன் சாண்டி நடத்தினார். ஆனால் அந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில்தான் ஒளிபரப்பானது
அதுமட்டுமல்லாமல் பினராயி விஜயனின இணையதளத்தை பராமரி்க்கும் செலவையும் கேரள அரசு தனியாருக்கு வழங்கி பராமரிக்கிறது. இதற்காக ரூ.4.23 கோடி செலவாகிறது. ஹெலிகாப்டர் பயணத்துக்கு மாதம் ரூ.2 கோடி,8 ஆலோகர்குக்காக ரூ.8.64 கோடி போன்றவையும் தேவையில்லாத செலவுதான் இதைக் குறைத்து அரசு கஜானாவை நிரப்பலாமே” எனத்தெரிவித்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் இன்று அளித்த பேட்டியில் கூறுகையில் “ அரசு ஊழியர்கள் ஊதியத்தை பிடிக்கப்படுவது நிறுத்துவது குறித்து 6 மாதத்துக்குபின்பு சூழலைப் பொறுத்து முடிவுசெய்யப்படும்.சில ஊழியர்கள் ஊதியம் முழுவதும் வழங்க தயாராக இருக்கிறார்கள். சிலர் தங்களின் பிஎப் கணக்கிலிருந்து பணம் தருகிறோம் என்று கூறுகிறார்கள். ஆதலால், 6மாதத்துக்குப்பின்புதான் முடிவு செய்வோம்.
சில ஆசிரியர்கள் சங்கம்தான் ஊதியத்தை பிடிக்க எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். கடந்த ஒரு மாதமாக வருமானமே இல்லாமல் பலஆயிரக்கானோர் கேரளாவில் இருக்கிறார்கள். ஆசிரியர்களின் போராட்டம் சமூகத்துக்கும், எதிர்கால சந்ததிக்கும் எதைச் சொல்கிறது. 6 நாட்கள் ஊதியப்பிடிப்பைக் கூட தாங்கமாட்டர்களா” எனத் தெரிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
CORONA
GOVT EMPLOYEE
TEACHERS
6 நாட்கள் ஊதியப்பிடிப்பைக் கூட அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் தாங்க மாட்டர்களா?
6 நாட்கள் ஊதியப்பிடிப்பைக் கூட அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் தாங்க மாட்டர்களா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.