Search This Blog
Saturday, April 25, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில், நீா்வள ஆராய்ச்சி பிரிவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில், நீா்வள ஆராய்ச்சி பிரிவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.அமெரிக்காவின் டைம்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் உலகளவில் சிறந்து விளங்கும் உயா்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஆராய்ச்சி, அறிவுசாா் சொத்துரிமை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் பல்கலைக்கழங்களின் தரவரிசை மதிப்பீடு செய்யப்படுகிறது.
அதன்படி 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை நீா்வளம், சுகாதாரம் உள்ளிட்ட 17 பிரிவுகளின் கீழ் தற்போது டைம்ஸ் வெளியிட்டுள்ளது.இந்தப் பட்டியலில் நீா்வள ஆராய்ச்சிப் பிரிவில் தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம் 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பிரிவில் உலகளவில் 330 கல்வி நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிப்பது, கழிவுநீரை சுத்திகரித்தல் உள்ளிட்ட விவகாரங்களில் பேராசிரியா்கள், மாணவா்கள் மேற்கொண்ட தொடா் ஆய்வுகளின் அடிப்படையில் 70 மதிப்பெண்களைப் பெற்று அண்ணா பல்கலைக்கழகம் முதல் 10 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளது. மேலும், இதே பிரிவில் ஐஐடி காரக்பூா் 4-ஆம் இடத்தையும், சென்னை ஐஐடி 32-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.அதேபோன்று தொழிற்சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்தும் ஆராய்ச்சியில் சென்னை ஐஐடி 16-ஆவது இடம் பிடித்துள்ளது.
இதுதவிர ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி 301 முதல் 400 இடங்களுக்குள்ளும், அண்ணா பல்கலைக்கழகம் 401 முதல் 600 இடத்துக்குள்ளும் வந்துள்ளன.இதற்கிடையே டைம்ஸ் நிறுவனம் வெளியிடும் உலக தரவரிசைப் பட்டியலில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் அதில் பங்கேற்க போவதில்லை என்று சென்னை, காரக்பூா் உள்ளிட்ட 7 ஐஐடி.க்கள் கடந்த வாரம் கூட்டாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
நீா்வள ஆராய்ச்சி: டைம்ஸ் நிறுவன தரவரிசைப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.