ஓர் சிறந்த ஆசிரியர் - விருப்பு வெறுப்பற்ற நடுநிலை மனத்தை உடையவர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 20, 2020

Comments:0

ஓர் சிறந்த ஆசிரியர் - விருப்பு வெறுப்பற்ற நடுநிலை மனத்தை உடையவர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீங்கள் பள்ளியில் பயின்றபோது உங்கள் ஆசிரியர் நடுநிலைமையாளராக விருப்பு, வெறுப்பற்றவராக பாரபட்சமற்றவராக எவ்வாறெல்லாம் திகழ்ந்தார் என்பதற்கான உண்மைச் சம்பவங்களை ஆசிரிய மாணவர்களை தனித்தனியே குறிப்பிடச் செய்து அவற்றை மற்ற மாணவ ஆசிரியர்களிடம் விவரித்து அதன் மூலம் தாங்கள் அடைந்த பண்புகளைக் குறிப்பிடச் செய்து மாணவர்களை ஆர்வமூட்டுக.
ஆசிரியரின் பார்வையில் குழந்தைகள் அனைவரும் சமம். உலகில் மனிதர் ஒவ்வொருவரும் மற்றவர்களிடமிருந்தும் வேறுபடுகின்றனர். அதே போன்று மாணாக்கர்களிடையேயும் வேறுபாடுகள் இருக்கவே செய்யும். வேறுபாடு மனித இயல்பு என்பதையும், மாணாக்கர்கள் அனைவரும் ஆசிரியரிடம் நம்பிக்கையுடன் வந்தவர்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
நன்றாகப் படிப்பவன், சொன்னதைச் செய்பவன், அழகானவன் என்றெல்லாம் வேறுபாடு காட்டாமல் அனைவரும் சமம், அனைவரும் என்னுடைய மாணவர்கள் என்ற ஒரு பால் கோடாமை உணர்வை வளர்த்துக்கொள்வார். கற்றல் நிகழ்வில் அனைத்து மாணாக்கர்களுக்கும் ஏற்படும் சிரமங்களைப் பாரபட்சமின்றிக் களைய முயற்சி எடுத்துக் கொள்வார். அனைவரும் அடைவுத் திறனைப் பெற கவனம் செலுத்துவார். திறனடைவில் பின்தங்கிய மாணாக்கர்களை இனங்கண்டு ஊக்குவித்து அவர்களும் தேர்ச்சியடைய வழி செய்வார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews