5 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களே! ரூ.4 இலட்சத்திற்கும் அதிகமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 19, 2020

1 Comments

5 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களே! ரூ.4 இலட்சத்திற்கும் அதிகமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வீட்டிலிருக்கும் பள்ளிக் குழந்தைகள் தனித்திறனை வெளிப்படுத்திட அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட்டுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் சிந்தனைச் சிறகுகள் ரூ.4 இலட்சத்திற்கும் அதிகமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பு.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் அனைவரும் வீட்டிலிருந்தபடியே சமூக விலகலைக் கடைப்பிடித்து வருகின்றோம். கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக வீடுகளில் தனித்து இருக்கின்றோம். எப்போதும் ஆடி ஓடித்திரியும் குழந்தைகளை வீட்டில் தனித்திருக்க வைப்பது மிகவும் சிரமமான காரியம்தான். என்றாலும் தொற்றுநோய் பரவாமல் தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் குழந்தைகளும் வீட்டிலேயே இருக்கிறார்கள். புத்தகங்கள்படிப்பது, டிவி பார்ப்பது, உட்கார்ந்த இடத்திலேயே வீட்டிலுள்ளவர்களுடன் விளையாடுவது என பொழுதுகள் கழிகின்றன. எப்போதும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு, வீட்டில் குழந்தைகளோடு தனித்திருக்கும் இந்த நாட்களில், குழந்தைகளிடமிருக்கும் தனித்திறமைகளை அடையாளம் காண்பதும் அவற்றை வளர்த்தெடுப்பதும் நமது பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு சமூகம் குறித்த அக்கறையை ஊட்டுவதையும் நாம் செய்தாக வேண்டும்.
பள்ளிக்கூடம் விட்டதும் வீடு, வீட்டிற்கு வந்ததும் வீட்டுப்பாடம் என எப்போதும் பாடப்புத்தகங்களோடு மட்டுமே பொழுதுகளைக் கழித்த குழந்தைகள், இப்படியான பொழுதுகளில் தங்களிடம் மறைந்திருக்கும் ஓவியம் வரைதல், கதை, கவிதை எழுதுதல் ஆகிய திறன்களை வெளிக்கொண்டு வருவதற்கான நல்வாய்ப்பொன்று கிடைத்திருக்கிறது. சிந்தனைச் சிறகுகள் எனும் நிகழ்வு பள்ளி மாணவ-மாணவியரின் தனித்திறனை வெளிப்படுத்துவதற்கான அரிய வாய்ப்பினை வழங்குகிறது. வீட்டிலேயே இருந்தாலும் பள்ளி மாணவ-மாணவிகளிடம் இருக்கும் ஓவியம், கவிதை, கதை எழுதும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் இது நடத்தப்படுகிறது. இணையம் வழி இந்த வாய்ப்பு வழங்கப்படுவதால் அனைவரும் வீட்டிலிருந்தபடியே இதில் பங்கேற்கலாம். இதில், தமிழகம் முழுவதுமுள்ள 5 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரும் பங்கேற்கலாம். ஓவியத் திறன் : இதில், 5முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் மட்டும் பங்கேற்கலாம். ‘கொரோனாவை வென்றிடுவோம்’ எனும் தலைப்பில் A4 அளவுள்ள வெள்ளைத்தாளில், உங்களின் பல வண்ண ஓவியங்களை அனுப்ப வேண்டும்.
கவிதைத் திறன் : இதில், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் மட்டும் பங்கேற்கலாம். ‘தனித்திருந்தாலும் விழித்திருப்போம்’ எனும் தலைப்பில் 30 வரிகளுக்கு மிகாமல் தங்கள் கவிதைகளை அனுப்ப வேண்டும். கதைத் திறன் : இதில்,9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் மட்டும் பங்கேற்கலாம். ‘கொரோனா நாட்களின் எனது அனுபவங்கள்’ எனும் தலைப்பில் A4 அளவுள்ள வெள்ளைத்தாளில், இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் தங்கள் கதைகளை அனுப்ப வேண்டும். இந்நிகழ்வு சென்னை, மதுரை, திருச்சி, கோவை என நான்கு மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு தலைப்பிலும் கீழ்க்கண்டவாறு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. ஒவ்வொரு தலைப்பிலும் சிறந்த படைப்புக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7,500/-,மூன்றாம் பரிசு ரூ.5,000/-, நான்காம் பரிசு ரூ.2,500/- ஒவ்வொரு தலைப்பிலும் பத்து படைப்புகளுக்கு ஆறுதல் பரிசு தலா ரூ.1,000/- வழங்கப்படவுள்ளன.
தங்களின் படைப்புகளை contesttamil@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது +91 99406 99401. என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கோ, https://connect.hindutamil.in/ss.php எனும் இணைய பக்கத்திலோ பதிவு செய்யுங்கள். ஓவியங்களை ஸ்கேன் செய்து (அல்லது) புகைப்படமாக எடுத்து அனுப்பி வையுங்கள். படைப்புகளை 2020 ஏப்ரல்-30-க்குள் அனுப்ப வேண்டும். உங்களின் தனித்திறனை உலகறியச் செய்யும் இந்த வாய்ப்பை பள்ளி மாணவ-மாணவிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகள் இதில் ஆர்வத்தோடு பங்கேற்க பெற்றோர்களும் ஊக்கப்படுத்துங்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews