Breaking

Thursday, April 16, 2020

கோவையில் தனிமை வார்டுகள் பல்கலை, கல்லுாரிகள் தேர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனாவை கட்டுப்படுத்த, துரித நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள பல்கலை, கல்லுாரிகளில் தனிமை வார்டுகள் அமைக்கப்படுகின்றன.
தமிழகத்தில், கொரோனா பரிசோதனை மெதுவாக நடந்து வருவதற்கு, தேவையான கருவிகள் இல்லாததும், காரணமாக உள்ளது. ஒரு லட்சம் ரேபிட் சோதனை கருவிகளுக்கு, சீனாவில் தமிழக அரசு, 'ஆர்டர்' கொடுத்தது.தாமதம்இவை, ஏப்., 8ம் தேதியே வந்திருக்க வேண்டிய நிலையில், தொழில் நிறுவனங்களுக்கான நிர்வாக பிரச்னைகளால், ஒரு வாரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.தற்போது, முதல் கட்டமாக, 50 ஆயிரம் கருவிகள் வரும் என, கூறப்படுகிறது. இதன் மூலம், அரை மணி நேரத்தில் கொரோனா பாதிப்பை உணர முடியும். இதனால், குறுகிய காலத்தில் அதிகளவு பரிசோதனை செய்யலாம்.
இன்று அல்லது நாளைக்குள் இக்கருவிகள் கோவைக்கும் வரும் என, கூறப்படுகிறது.இக்கருவி மூலம், அதிகளவு நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்த இடங்கள் தேவை. இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.மாற்ற திட்டம்இதற்காக, கோவையில் உள்ள சில பல்கலை, கல்லுாரிகளை தனிமை வார்டாக மாற்ற திட்டமிட்டுள்ளனர்.உள்ளாட்சி துறை அதிகாரிகள் கூறுகையில், 'தனிமை வார்டுகள் அமையும் இடங்களை இப்போதே தெரிவிக்க முடியாது. அவ்வாறு அறிவித்தால், தேவையில்லாத சர்ச்சைகள் எழுவதற்கு வாய்ப்புள்ளது' என்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog