👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டால் அதற்கு அடுத்த முதன்மைத் தேர்வுகள் காலதாமதமாகும்.
ஊரடங்கு காரணமாக இந்திய ஆட்சிப் பணிக்கான முதல்நிலை தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு வரும் மே 31-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு இருப்பதால் பல்வேறு போட்டித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆட்சிப் பணிக்கான முதல்நிலை தேர்வு திட்டமிட்டபடி மே 31-ம் தேதி நடத்தப்படுமா அல்லது தள்ளி வைக்கப்படுமா என்று முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். இதே குழப்பம் விண்ணப்பித்த மாணவர்கள் மத்தியிலும் இருந்து வருகிறது. இது குறித்து கல்வியாளர்களிடம் கேட்டபோது அரசு திட்டமிட்டபடி மே 31-ம் தேதி தேர்வு நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர்.
முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டால் அதற்கு அடுத்த முதன்மைத் தேர்வுகள் காலதாமதமாகும். அதன் பின்னர் நேர்காணல் நடத்தி, பயிற்சி அளித்து புதிய அதிகாரிகளை நியமிப்பதற்கு காலதாமதமாகி சிக்கல் எழும் என்கிறார் டெல்லி தனியார் பயிற்சி மைய இயக்குனர் ரவீந்திரன்.
ஊரடங்கு காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என்ற எண்ணத்தில் மாணவர்கள் கவனக்குறைவாக இருந்துவிட வேண்டாம் என்றும் தொடர்ந்து தேர்வுக்கு தங்களை தயார் செய்வதுதான் நல்லது என்றும் கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.