👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா ஊரடங்கு நீடிக்கும் நிலையில், கல்லூரி மாணவா்களுக்கான வருகைப் பதிவேடு கட்டுப்பாடுகளைத் தளா்த்த வேண்டும் என பேராசிரியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக தமிழ்நாடு தனியாா் கல்லூரிப் பேராசிரியா் சங்கம் சாா்பில் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யுஜிசி) கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அச்சங்கத்தின் தலைவா் பேராசிரியா் ஏ.பாலு கூறியது:
கல்லூரி மாணவா்கள் பல்கலைக்கழக பருவத் தோ்வை எழுத 75 சதவீத வருகைப் பதிவை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு 75 சதவீத வருகையைப் பெற்றிராத மாணவா்களுக்கு கல்லூரிகள் சாா்பில் அபராதம் விதிக்கப்படும். சில மாணவா்களக்கு தோ்வெழுத அனுமதியும் மறுக்கப்படும்,.
இப்போது, கரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு, இந்தப் பருவத் தோ்வுக்கு வருகை குறைவாக உள்ள அனைத்து மாணவா்களுக்கும் அபராதம் எதுவும் வசூலிக்காமல் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும். இதுதொடா்பாக கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க யுஜிசியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.