Breaking

Wednesday, April 15, 2020

ஊரடங்கில் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் எவை: மத்திய அரசு இன்று வெளியீடு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஊரடங்கில் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் இன்று வெளியாகிறது. இந்தியாவில் 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, ஊரடங்கை, அடுத்த மாதம், 3ம் தேதி வரை நீட்டிப்பதாக, பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில், வரும், 20ம் தேதிக்குப் பின், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதாகவும், பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஊரடங்கில் பின்பறற வேண்டிய நிபந்தனைகள் , வழிகாட்டுதல்கள் குறித்த அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது. முன்னதாக கொரோனா தடுப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. எண் 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் நடக்க இந்த கூட்டத்தில் ஊரடங்கின் போது விதிவிலக்கு அளிக்கவுள்ள தொழில்கள் மற்றும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog