இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக புதிய தொழில்நுட்பங்கள் நமது தினசரி வேலைகளை எளிமையாக்குகிறது. அதன்படி எளிமையான இலவச அரிசி வழங்கும் இயந்திரம் நான்றாக இருக்குமே என நீங்கள் நினைக்கலாம், ஆனால் இந்த இயந்திரம் இருப்பது உண்மைதான்.
அதன்படி கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மிகவும் தேவைப்படுபவர்களுக்கு உதவ இந்த அரிசி ஏடிஎம்-கள் வியாட்நாமை சுற்றி அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வைரஸ் பரவுதலை தடுக்க
குறிப்பாக வியட்நாமில் இதுவரை 265கொரோனா நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் இறப்புகள் ஏதுவும் இல்லை எனத் தகவல்கள் வெளிவந்துள்ளதுன. இந்த எண்ணிக்கை உலகின் பிற பகுதிகளை விட கணிசமாகக் குறைவு. ஆனாலும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, சமூக தூரத்தை அமல்படுத்தியுள்ளது இந்நாடு.
மேலும் சிறு வணிகங்களை திறம்பட மூடிவிட்டு ஆயிரக்கணக்கானவர்களை வேலையிலிருந்து வெளியேற்றியுள்ளது வியாட்நாம்.எனவே வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் வணிகர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் உதவியுடன் வியட்நாம் முழுவதும் பல நகரங்களில் இலவச அரிசியை விநியோகிக்கும் இயந்திரங்களை (அரிசி ஏடிஎம்) அமைத்துள்ளனர்.
8மணி முதல் 5மணி
அதாவது ஹனோய் நகரில்இ ஒரு பெரிய நீர் தொட்டியில் உள்ள அரிசி காலை 8மணி முதல் 5மணி வரை குடியிருப்பாளர்களின் பைகளை நிறப்புகிறது. குறிப்பாக ஒவ்வொரு நாளும் இந்த செயல்பாடு நடைபெறுவதாக அரசு நடத்தும் செய்தி நிறுவனம் VNA தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அட்டகாசமான இயந்திரத்தில் அரிசி பெற வரிசையில் காத்திருப்பவர்கள் ஒருவருக்கொருவர் கண்டிப்பாக ஆறு அடி தூரத்தில் நிற்க வேண்டும் என்றும், பின்பு அவர்கள் அரிசி பெறுவதற்கு முன்பு கை சுத்திகரிப்பாளரைப் பயன்படுத்த வேண்டும் என்று உள்ளூர் செய்தித்தாள் ஹனோய் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஏடிஎம் 24/7
மத்திய நகரம் என்று கூறப்படும் ஹியூவில் இருக்கும் ஒரு கல்லூரியில் அமைந்துள்ள ஒரு அரிசி ஏடிஎம் உள்ளூர்வாசிகளுக்கு 2 கிலோகிராம் இலவச அரிசியை வழங்குகிறது. பின்பு ஹோ சி மின் என்று கூறப்படும் நகரில் ஒரு அரிசி ஏடிஎம் 24/7 நேரமும் அரிசியை விநியோகிக்கிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.