கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது, இந்தியாவில் ஊடுருவிய கொரோனா ஊரடங்கு உத்தரவின் மூலம் குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இதற்கான மாற்றுமருந்து என்ன என்று உலக நாடுகள் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் நிலையில் கேரள அரசு புதிய முயற்சியை மேற்கொள்ளவுள்ளது என்று அறிவித்துள்ளது.
வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயர்
சீனா வுகான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து பரவியதாக தெரிவிக்கப்படும் வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் ஆனது சீனாவில் அதிவேகமாக பரவிய நிலையில் உலக நாடுகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியது.
6,412 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு
இந்தியாவில் 6,412 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் 199 இறப்புகளைப் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு உலக அளவில் வயதானவர்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தலைகீழாக மாறி இருக்கிறது. இது இந்தியாவில் கொரோனா தாக்குதலில் 83 சதவீதத்திற்கு குறைவானோர் 60 வயதுக்கு உட்படுத்தப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உலக அளவில் வயதானவர்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தலைகீழாக மாறி இருக்கிறது. இது இந்தியாவில் கொரோனா தாக்குதலில் 83 சதவீதத்திற்கு குறைவானோர் 60 வயதுக்கு உட்படுத்தப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.
பரவாமல் தடுக்க அதிகளவில் சோதனை
கொரோனா வைரஸை பரவாமல் போராட, அதிகளவில் சோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதனால், நாட்டில் அதிவேகமாக கொரோனா பரவி வரும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கு கொரோனா பரிசோதனைகளை வேகமாக செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா கண்டறிவதை எளிமையாக்கும் வகையில் தொழில்நுட்ப வல்லுனர்களான ஆப்பிளும் கூகுளும் இணைந்து தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி உள்ளன. இந்த செயலியானது ப்ளூடூத் கம்யூனிகேஷன் மூலம் இயக்கப்பட்டு அருகில் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை அளிக்கலாம் என தெரிக்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்
குறிப்பாக இந்த தொழில்நுட்பம் மூலம் கொரோனா பாதித்த நபர், எந்த இடத்தில் இருந்து தொடர்பு ஏற்பட்டது போன்ற விவரங்களை அளிக்காது என்றாலும் தெரிவிக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன் மே மாத பாதியில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.