2 மாதங்களுக்கு Stadia Pro-வை இலவசமாக அளிக்கிறது கூகுள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 12, 2020

Comments:0

2 மாதங்களுக்கு Stadia Pro-வை இலவசமாக அளிக்கிறது கூகுள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோவிட்-19 ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் இருப்பதாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியுள்ளதாலும், கூகுள் தனது Cloud gaming சேவையான Stadia Pro விற்கான $130 டாலர் நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்துவிட்டு இலவசமாக 14 நாடுகளில் 2 மாதங்கள் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பதிவு செய்யும் (signs up) நபர்களுக்கு Stadia Pro 2 மாதங்கள் இலவசமாக கிடைக்கும். மேலும் GRID, Destiny 2: The Collection, மற்றும் Thumper, the tech giant ஆகிய 9 கேம்களுக்கான உடனடி அணுகும் வசதியும் (instant access) வழங்கப்படுகிறது. இன்னும் அதிகமான கேம்களை store-ல் வாங்கலாம் இது உங்கள் Stadia Pro சந்தாவை நீங்கள் ரத்து செய்தாலும் கூட விளையாட உங்களுடையதாகவே இருக்கும் என கூகுள் கூறியுள்ளது. நீங்கள் ஏற்கனவே கட்டணம் செலுத்திய Stadia Pro சந்தாதாரர் என்றால், நாங்கள் உங்களிடம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கட்டணம் வசூலிக்க மாட்டோம். அதற்கு பிறகு மாதத்துக்கு Stadia Pro-விற்கான சந்தா $ 9.99. ஆனால் நீங்கள் எந்த நேரத்திலும் சந்தாவிலிருந்து விலகலாம். நீங்கள் வீட்டில் அடைந்து கிடக்கும் நேரத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் நேரம் செலவிட விடியோ கேம்கள் மிகச் சிறந்த வழி. சமூக இடைவெளி விடுவது மிகவும் முக்கியமானது. ஆனால், நீண்ட காலம் வீட்டில் அடைந்து கிடப்பது மிகவும் கடினமானது. மேலும், இது தனிமையை உணர்த்தும், என கூகுளின் vice president for Stadia Phil Harrison கூறியுள்ளார். இலவச Stadia Pro சலுகை ஏப்ரல் 8 ஆம் தேதி துவங்கி அடுத்த 48 மணி நேரத்தில் வெளி வந்துள்ளது. நீங்கள் Stadia-வில் புதிதாக விளையாட ஆரம்பித்துள்ளீர்கள் என்றால் அது மிகவும் எளிதானது. Stadia.com என்ற இணையதளத்துக்கு சென்று பதிவு (sign up) செய்துக் கொள்ளுங்கள். Stadia app-ஐ ஆண்ட்ராய்ட் அல்லது iOS -ல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள். அடுத்து உங்கள் மடிக்கணிணி, கணிணி அல்லது Chrome OS tablet-ல் விளையாடுங்கள். Wi-Fi on Pixel அல்லது அது இயங்கக்கூடிய பல ஆண்ட்ராய்ட் கைபேசிகளில் விளையாடலாம், என கூகுள் கூறுகிறது. இந்த நேரத்தில் அதிகப்படியான மக்கள் வீட்டிலிருப்பதால் இதற்கான தேவை அதிகரித்துள்ளது எனவே இணைய நெருக்கடியை போக்க பொறுப்பான அணுகுமுறையை எடுத்து வருகிறோம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews