முதல் விஷயம் நீங்கள் படிக்கும் போது, உங்களுக்கென ஒரு Goal வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட இந்த நேரத்திற்குள்ளாக, இந்த பாடங்களை படித்து முடிப்பேன் என்று எண்ண வேண்டும். உதாரணமாக தேர்வின் போது, கடைசி நேரத்தில் பல மாணவர்கள் விறுவிறு என்று படிப்பார்கள். அப்போது அவர்களுடைய முழு கவனமும் படிப்பில் மட்டும் தான் இருக்கும். அது மட்டும் எப்படி முடிகிறது. எனவே, உங்கள் கவனத்தை நீங்கள் நினைத்தால் கட்டுப்படுத்த முடியும். அதற்கு சிறந்த வழி குறி்த்த நேரத்தில் படித்து முடிக்க வேண்டும் என்ற உறுதி வேண்டும்.
படிக்கும் போது கவனத்தை சிதறலடிப்பதில் செல்போன் மிகமிக முக்கிய பங்கு வகிக்கிறது. சாதரண மெசேஜ் தான் வந்திருக்கும். ஆனால், அது என்ன மெசேஜ் என்று பார்த்துவிட்டு அதோடு நின்று விட மாட்டார்கள். அதன்பிறகும் வேறு ஏதாவது நோட்டிபிகேஷன் வந்துள்ளதா, பேஸ்புக், வாட்ஸ்அப், டிக்டாக் என்று சென்று விடுவார்கள். இப்படி இருக்கும் போது, செல்போனில் இருந்து வெளியே வந்து, படிப்பை தொடருவதற்கு மிகமிக கடினமான விஷயமாகும். எனவே, படிக்கும் போது செல்போனை சைலெண்டில் போட்டு விடுங்கள். முடிந்தால், கண்ணுக்கு தெரியாத இடத்தில் வைத்து விடுங்கள்.
நூற்றில் 90 சதவீதம் பேருக்கு இந்த பழக்கம் உண்டு. சிறிது சோம்பல் ஏற்பட்டால், கூட நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று சென்று விடுவார்கள். இன்றைய வேலைகளை இன்றே முடிக்க வேண்டும். நீங்கள் படிப்பதற்கு திட்டமிட்டு விட்டால், அதில் ஒன்றில் கூட கால தாமதம் ஏற்பட்டு விடக்கூடாது. ஒரு விஷயத்தை நீங்கள் தள்ளி போடும் போது, அதற்கு அடுத்துள்ள காரியங்களும் தடைபட்டு போகும். எனவே, நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்பதை இன்றோடு மறந்து விடுங்கள். மேலும், எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை, இன்றைய செயல்களை இன்றே முடித்துவிடுவேன் என்று தீர்மானமாக இருங்கள்
எல்லோராலும் தொடர்ந்து ஒரே இடத்தில் இருந்து, ஒரே பாடத்தை படித்துக் கொண்டிருக்க முடியாது. தொடர்ந்து படிக்க முடியாவிட்டால், படித்தை எழுதி பாருங்கள். வாசிப்பதில் இருந்து எழுதுவதற்கு மாற்றுங்கள். இவ்வாறு நீங்கள் உங்கள் செயல்களை மாற்றிக் கொண்டே இருக்கும் போது, மனம் வேறு எங்கேயும் செல்லாது. குறிப்பாக பகல் கனவு காணாது. உதாரணத்திற்கு அரை மணி நேரம் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தால், ஒரு 10 நிமிடங்கள் நீங்கள் வாசித்தவற்றில், முக்கியமானதை குறிப்புகள் எடுப்பதற்கு ஒதுக்கிக் கொள்ளவு. பின்பு, தொடர்ந்து வாசிக்கலாம். ஒரு பாடத்தை படித்து முடித்த பிறகு, நீங்கள் எடுத்துள்ள குறிப்புகளையும் ஒரு முறை வாசித்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலானோர் இரவில் படித்த முடித்த பிறகு அப்படியே உறங்கச் சென்று விடுவார்கள். உண்மையில் இது தான் மிகமிக தவறான செயல். இவ்வாறு படித்து முடித்த பின் உறங்கினால், நீங்கள் படித்தவைகள் உங்கள் ஞாபகத்திற்கு செல்லாது. இதற்கு நேர் மாறாக, தூங்கி எழுந்தவுடன் படிக்க வேண்டும். அதாவது, இரவு முழுவதும் நன்றாக தூங்கியிருப்பீர்கள். காலை எழுந்தவுடன் படிக்கீறர்கள். அதனைத் தொடர்ந்து பகல் முழுவதும் விழித்துக் கொண்டிருப்பீர்கள். இதுவே சரியான அணுகு முறை. சிலருக்கு இரவில் படிப்பது தான் பிடிக்கும். அவர்கள், இரவில் படித்தவுடன் குறைந்தது 4 மணி நேரம் கழித்தே தூங்க செல்ல வேண்டும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.