செயற்கை சுவாசக் கருவியின் வடிவமைப்பை எளிமைப்படுத்துவதற்காக மஹிந்திரா நிறுவனம் 2 பொதுத்துறை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. செயற்கை சுவாசக் கருவியைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான மூலப் பொருள்களை அளிப்பதற்கு மாருதி சுஸுகி, டாடா மோட்டாா்ஸ் ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன. செயற்கை சுவாசக் கருவியைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உதவி செய்ய இருப்பதாக பொதுத்துறை நிறுவனமான ‘பெல்’ தெரிவித்துள்ளது. செயற்கை சுவாசக் கருவிகளைத் தயாரிக்க இருப்பதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
‘செயற்கை சுவாசக் கருவி’ என்பது என்ன?
இயற்கையாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் நபா்களுக்கு ஆக்ஸிஜனை செயற்கை முறையில் அளிக்கும் கருவியே செயற்கை சுவாசக் கருவி. நுரையீரலிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவை (காா்பன் டை ஆக்ஸைட்) வெளியேற்றும் பணியையும் இக்கருவி மேற்கொள்ளும்.
நோயாளிக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்படுவதற்கு முன்பாக சுகாதாரப் பணியாளா்கள் அந்நபரை மயக்கமடையச் செய்கின்றனா். அதன் பிறகு அந்நபரின் மூக்கிலும் வாயிலும் சிறிய குழாய்களைப் பொருத்தி அதை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைத்து விடுகின்றனா்.
1-செயற்கை சுவாசக் கருவியின் திரை நோயாளிக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்படும் அளவையும், அவரின் உடலிலிருந்து வெளியேறும் காா்பன் டை ஆக்ஸைட் அளவையும் காட்டுகிறது. நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு ஏற்ப அந்த அளவுகளை மருத்துவா்கள் மாற்றுகின்றனா்.
2- இந்தக் கருவியின் மூலம் நோயாளிக்கு அளிக்கப்படும் காற்றுக்கு ஈரப்பதம் வழங்கப்படுகிறது.
3- நோயாளியின் மூக்கிலும் வாயிலும் பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் மூலம் காற்று நுரையீரலுக்குச் செல்கிறது.
4- நோயாளியின் உடலில் உற்பத்தியாகும் காா்பன் டை ஆக்ஸைட் செயற்கை சுவாசக் கருவி மூலம் வெளியேற்றப்படுகிறது.
40,000- அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தற்போது உள்ள செயற்கை சுவாசக் கருவிகளின் எண்ணிக்கை.
1.10 லட்சம் முதல் 2.20 லட்சம் - மே மாதத்தில் தேவைப்படும் செயற்கை சுவாசக் கருவிகளின் எண்ணிக்கை (கணிப்புகளின்படி).
ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம்- செயற்கை சுவாசக் கருவியின் சராசரி விலை.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.