''மரத்தடியில் வகுப்புகள் நடக்காத நிலையை ஏற்படுத்த அரசு நடவடிக்கை'' - அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 20, 2020

Comments:0

''மரத்தடியில் வகுப்புகள் நடக்காத நிலையை ஏற்படுத்த அரசு நடவடிக்கை'' - அமைச்சர் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'மரத்தடியில் வகுப்புகள் நடக்காத நிலையை ஏற்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - ஆண்டி அம்பலம்:நத்தம் தொகுதி, ராஜக்காபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, குமாரபாளையத்தில், நுாலகம் அமைக்க வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: 5 சென்ட் நிலம் அல்லது வாடகை கட்டடம் இருந்தால், அரசு பரிசீலிக்கும்.ஆண்டி அம்பலம்: கட்டடம், இடம் உள்ளது; நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், அப்பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., - சீதாபதி: திண்டிவனம் தொகுதி, மரக்காணம் பகுதியில், நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், வகுப்பறை இல்லாததால், மாணவர்கள் மரத்தடியில் படிக்கின்றனர். அமைச்சர் செங்கோட்டையன்: மாணவர்கள், மரத்தடியில் படிக்கும் நிலையே இல்லை என்பதை ஏற்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு, நபார்டு வங்கியில் இருந்து, 223 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; அதில், கட்டடம் கட்டப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews