இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டப்பயிற்சி முகாம்: தேர்வான மாணவர் பட்டியல் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 12, 2020

Comments:0

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டப்பயிற்சி முகாம்: தேர்வான மாணவர் பட்டியல் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Indian Space Research Organisation: இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் ISRO YUVIKA 2020 தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்கள் வெளிவந்துள்ளது இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்துக்கு, முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி பயற்சி திட்ட வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கியது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் YUVIKA திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. திருவனந்தபுரம், பெங்களூரு, ஷில்லாங், அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள இஸ்ரோ நிறுவனத்தில் வைத்து பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்த நிலையில், தற்போது ISRO YUVIKA 2020 பயிற்சிக்கு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட (ProvesionallY Selected) மாணவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களுடைய முடிவுகளை www.isro.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இதன் அடுத்தக்கட்டமாக இறுதி முடிவுகள் மார்ச் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும். மாணவர்கள் தங்களுக்கான கல்வி சான்றிதழ், கற்றல் திறன் உள்ளிட்ட விவரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். அதாவது 8 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள், பள்ளி அளவில் நடைபெற்ற தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள், NCC, NSS ஆகியவற்றில் மாணவர்களின் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இறுதிகட்டமாக மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
YUVIKA பயிற்சி வகுப்பில் அடிப்படை விண்வெளி அறிவியல், கோள்களின் இயக்கங்கள், ராக்கெட்டுக்களின் செயல்பாடு உள்ளிட்ட அறிவியல் கோட்பாடுகள் எடுத்துரைக்கப்படும். குறிப்பாக இஸ்ரோ மையத்துக்கு சென்று நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை பார்க்கவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews