Search This Blog
Saturday, March 07, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு உருவாகி வரும் நிலையில், கல்வி நிறுவன வளாகங்களில் அதிக எண்ணிக்கையில் கூடுவதைத் தவிா்க்குமாறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
சீனா, ஈரான், இத்தாலி, தென்கொரியா உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா பாதிப்பு அதிக ரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கரானோ வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து, வைரஸ் பாதிப்பு பரவுவதைத் தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து விமான நிலையங்களிலும், பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களில் கூட்டமாகக் கூடுவதைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, ஹோலி கொண்டாட்டங்களையும் தவிா்த்துள்ளது.
அதுபோல, உயா் கல்வி நிறுவனங்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை யுஜிசி வழங்கியுள்ளது. இதுதொடா்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியுள்ள நிலையில், எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே இந்தத் தடுப்பு நடவடிக்கை சாத்தியமாகும். அதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, வளாகத்துக்குள் அதிக எண்ணிக்கையில் கூடுவதைத் தவிா்ப்பது, கரோனா பாதிப்பு அறிகுறிகள் மாணவா்களுக்கு உள்ளதா என்பதை பேராசிரியா்கள் அவ்வப்போது கண்காணிப்பது, கைகளை தொடா்ச்சியாக கழுவுவது, முகக் கவசம் அணிவது , கண்கள், மூக்கு, வாய் பகுதிகளை கைகளால் தொடுவதைத் தவிா்ப்பது போன்ற அறிவுரைகளை மாணவா்களுக்கு வழங்குவது, அறிகுறிகள் காணப்படும் மாணவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்புவது போன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
'கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களை, கல்லுாரி வளாகங்களில் அனுமதிக்க வேண்டாம்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலை களுக்கு, யு.ஜி.சி., அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:கல்லுாரி, பல்கலை வளாகங்களில், கூட்டமாக சேர வேண்டாம். 'கொரோனா' வைரஸ் பரவிய நாடுகளுக்கு சென்று வந்திருந்த மாணவர்களை, மருத்துவமனையின் தனி கண்காணிப்பில் வைக்க வேண்டும். அவர்கள், டாக்டரின் அனுமதியின்றி, கல்லுாரி வளாகத்துக்குள் வரக்கூடாது.பேராசிரியர்கள், மாணவர்கள், கல்லுாரி பணியாளர் உள்ளிட்ட அனைவரும், சுகாதார துறையின் முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். கைகளை, அடிக்கடி சோப்பு மற்றும் கிருமி நாசினியால் கழுவ வேண்டும்.
தும்மல், இருமல் வந்தால், அருகில் நிற்பவர்கள் மீது படாமல், கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல், கண்கள், மூக்கு மற்றும் வாயை தொட வேண்டாம். கணினி, கதவு, ஸ்விட்ச் உள்ளிட்டவற்றை, அடிக்கடி தொடக் கூடாது; தொட்டால் கைகளை, சோப்பால் கழுவ வேண்டும். கல்லுாரிகள், பல்கலை வளாகங்களில், பல இடங்களில், 'கிருமி நாசினி' திரவம் வைத்திருக்க வேண்டும். காலால் திறக்கப்படும், குப்பை பெட்டிகளை பயன்படுத்த வேண்டும். மாணவர் விடுதிகளை, முழு கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். உடல் நல பிரச்னைகள் தெரிந்தால், உடனடியாக, அந்த மாணவர்களை, விடுதிகளில் இருந்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
கரோனா: அதிக எண்ணிக்கையில் கூடுவதை தவிா்க்க வேண்டும் - UGC அறிவுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.