👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோவை மாநகராட்சியில் பணிபுரிய, 321 பேருக்கு, துப்புரவு தொழிலாளர் பணி நியமன உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.கோவை மாநகராட்சியில், 2,520 நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள், 2,308 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். 549 காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய, மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டது.
துப்புரவு தொழிலாளர் பணி என்றாலும் கூட, பி.காம்., - பி.எஸ்.சி., - பி.இ., பட்டதாரிகள் உட்பட, 7,300 பேர் விண்ணப்பித்ததில், 5,200 பேரே நேர்காணலில் பங்கேற்றனர். இட ஒதுக்கீடு அடிப்படையில், அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது.
இந்நிலையில், 321 பேருக்கு துப்புரவு தொழிலாளர் பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி, குனியமுத்துாரில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது; கமிஷனர் ஷ்ரவன்குமார் தலைமை வகித்தார். துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.பணி நியமன உத்தரவை வழங்கி, அமைச்சர் வேலுமணி பேசுகையில், ''இது, முதல்கட்டம்.
அடுத்தகட்டமாக, இன்னும், 500 பேருக்கு வேலை வழங்கப்படும்.
இடைத்தரகர் இல்லாமல், நேர்மையான முறையில், வேலை வழங்கப்பட்டுள்ளது. துப்புரவாளர்கள் கடவுளை விட மேலானவர்கள். அவர்களை எப்போதும் மறக்கக்கூடாது,'' என்றார்.'எந்த வேலையாக இருந்தாலும் செய்வோம்!' தெலுங்குபாளையத்தை சேர்ந்த மோனிகா,23, கூறுகையில், ''எம்.எஸ்.சி., படித்துக் கொண்டிருக்கிறேன்.
மாநகராட்சியில் வேலைக்கு ஆள் எடுப்பதாக அறிவிப்பு வந்தது; விண்ணப்பித்து, நேர்காணலில் பங்கேற்றேன். படித்திருக்கிறோம் என்பதால், துப்புரவு பணி செய்ய மாட்டோம் என்பதில்லை. எந்த வேலையாக இருந்தாலும் செய்வோம். இன்று (நேற்று) காலை போனில் தகவல் வந்தது; இன்ப அதிர்ச்சியாக இருந்தது,'' என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.