WhatsApp பயன்படுத்தும் பெண்களுக்கு போலீசார் அறிவுரை (எச்சரிக்கை) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 04, 2020

Comments:0

WhatsApp பயன்படுத்தும் பெண்களுக்கு போலீசார் அறிவுரை (எச்சரிக்கை)

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பெண்கள், தங்களின் புகைப்படத்தை, 'வாட்ஸ் ஆப்' செயலியில், 'டிபி'யாக வைக்கக் கூடாது' என, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
சமூக வலைதளமான, 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்றவற்றில், பெண்கள் மற்றும் ஆண்கள், தங்களின் படங்கள் மற்றும் குடும்பத்தாரின் படங்களை பதிவிட்டு வருகின்றனர். அதிகம் பேர், 'லைக்' செய்வர் என்பதால், இளம்பெண்கள், தங்களின் விதவிதமான படங்களையும் பதிவிடுகின்றனர். இதுவே, அவர்களுக்கு வில்லனாக மாறி விடுகிறது.சில மர்ம நபர்கள், பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுகின்றனர்.
தற்போது, இதுபோன்ற புகார்கள், போலீசாருக்கு அதிகம் வரத் துவங்கி உள்ளன. இதனால், சமூக வலைதளத்தை கையாளும் முறைகள் பற்றி, பெண்களுக்கு, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பெண்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவியர், 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில், தங்களின் புகைப்படங்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். 'டிஸ்பிளே போட்டோ' என்ற, 'டிபி'யாக, தங்களின் படங்களை வைக்கவே கூடாது.
மேலும், 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 'பேஸ்புக்' பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. குழந்தைகள், இணையதளத்தில் அதிக நேரம் செலவிடுவதை, பெற்றோர் கண்காணிக்க வேண்டும். வதந்திகள் வேகமாக பரவி வருவதால், 'வாட்ஸ் ஆப்' குழு அமைத்து செயல்படும், 'அட்மின்'கள் கவனமாக இருக்க வேண்டும். நடக்கும் தவறுகளுக்கு, அவர்களே பொறுப்பு; நடவடிக்கை எடுக்க, சட்டத்தில் இடம் உண்டு.'ஆன்லைன்' வர்த்தகத்தில், மோசடிகள் அதிகரித்து வருவதால், நம்பத்தகுந்த இணையதளத்தை பயன்படுத்தி, பொருட்கள் வாங்கிய பின், பணம் செலுத்த வேண்டும்.
அதேபோல, பல கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக வரும், எஸ்.எம்.எஸ்., தகவல்களையும் நம்ப வேண்டாம். திருமணத் தகவல் தொடர்பான இணையதளங்களில், தேவையில்லாமல் குடும்ப விபரங்களை பதிவிடக் கூடாது. உங்கள் மகளை திருமணம் செய்ய, வெளிநாட்டில் இருந்து வருவதாக கூறி, பணம் பறிக்க முயற்சி செய்யலாம்; உஷாராக இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews