👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தரமான கல்வியை மேம்படுத்த தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு: ஓ.பன்னிர்செல்வம்.
தமிழக அரசின் 2020-2021 பட்ஜெட்டை துணைமுதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தாக்கல் செய்தார். அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. பத்தாவது முறையாக தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே கடந்த ஒன்பது முறை இவர் நிதி அமைச்சராக இருந்து தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். தமிழக பட்ஜெட்டை அதிகமுறை தாக்கல் செய்தவர் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
* பட்ஜெட் தாள்கள் அடங்கிய பெட்டியில் ஜெயலலிதாவின் படம் அச்சிடப்பட்டுள்ளது.
* நீரை சிக்கனமாக பயன்படுத்தும் திருந்திய நெல் சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தப்படும்.
* 2020-21 நிதியாண்டுக்கான தமிழக அரசின் மூலதன செலவு ரூ.36,367.78 கோடியாக இருக்கும்.
* தமிழக அரசின் கடன் ரூ4,56,660.99 கோடியாகவும், வருவாய் பற்றாக்குறை ரூ25.71 ஆயிரம் கோடியாகவும் உள்ளது.
* தமிழ் வளர்ச்சி துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* காவல்துறைக்கு - 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சிறைச்சாலை துறைக்கு 392 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மீன்வளத்துறைக்கு 1,229 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நீர் பாசனத்திற்காக 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நீதி நிர்வாகத்திற்கு 1,403 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* உணவுத்துறைக்கு 6,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கால்நடைத்துறைக்கு 199 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று கூறினார். மேலும் உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது
என்றும் பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் அவர் உரையில் கூறியது குறிப்புகளாக பின்வருமாறு...
*தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 7.27%, கணிக்கப்பட்ட தேசிய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட அதிகம்
*மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கான பங்கு சிறிதளவு அதிகரித்துள்ளது
*மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் தமிழகத்தின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும்
*ஹார்வர்டு, ஹூஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி கற்பித்தலை கொண்டுவர சீரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன
*சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் பற்றாக்குறை
*2021-2022 நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.10,970 கோடியாக குறையும்
*தமிழக அரசின் நிலுவைக் கடன் ரூ.4,56,660 கோடி
*தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு
*உணவு மானியத்திற்கு ரூ.6500 கோடி ஒதுக்கீடு
*தமிழக காவல்துறைக்கு ரூ.8876 கோடி ஒதுக்கீடு
*அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ரூ75.02 கோடி ஒதுக்கீடு
*மாநிலங்களுக்கு இடையிலான நிதிப்பகிர்வில் தமிழகத்தின் பங்கு 4.789 சதவீதமாக உயர்வு
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.