TNPSC எந்தெந்த தேர்வுகளில் முறைகேடு?:பல புகார்களுக்கு அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்து விளக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 31, 2020

Comments:0

TNPSC எந்தெந்த தேர்வுகளில் முறைகேடு?:பல புகார்களுக்கு அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்து விளக்கம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள சில தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகார்களுக்கு டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்துள்ளது.
'குரூப் - 4, குரூப் - 2, குரூப் - 2 ஏ' தேர்வு முறைகேடுகளை தொடர்ந்து, குரூப் - 1 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசு துறைகளில், காலியிடங்களை நிரப்புவதற்கான, போட்டி தேர்வுகள், அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படுகின்றன. வி.ஏ.ஓ., உள்பட, 9,398 பணியிடங்களுக்கு நடந்த, குரூப் - 4 தேர்வில், பெரும் முறைகேடுகள் நடந்தது தெரிய வந்துள்ளது.இந்த விவகாரத்தில், டி.என்.பி.எஸ்.சி., ஊழியர்கள், தேர்வை நடத்தும் பொறுப்பில் இருந்த அதிகாரிகள், அரசு துறை ஊழியர்கள், அலுவலர்கள் என, வரிசையாக கைதாகி வருகின்றனர்.
தோண்ட தோண்ட பூதம் இடைத்தரகர்களின் முழுமையான கட்டுப்பாட்டில், இந்த தேர்வு நடந்துள்ளது, விசாரணையில் வெளிச்சமாகி உள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட, 99 தேர்வர்கள், வாழ்நாள் முழுவதும், அரசு பணியில் சேரவும், தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்துவது குறித்து, அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், போட்டி தேர்வு விசாரணையில், தினமும் ஒரு பூதம் கிளம்புகிறது. தற்போது கைதான இடைத்தரகர்களில் சிலர், 2017ல் நடந்த, குரூப் - 2 ஏ தேர்வில், முறைகேடாக தேர்ச்சி பெற்று, அரசு பணியில் இருப்பது தெரிய வந்துள்ளது.அவர்களிடம் விசாரணை நடத்தியதில், 2018ல் நடந்த, குரூப் - 2 தேர்விலும் முறைகேடு நடந்து உள்ளது அம்பலமாகியுள்ளது. இதில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த, சப் - இன்ஸ்பெக்டர் சித்தாண்டி, முறைகேடுகளுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.
தன் மனைவி உள்ளிட்ட குடும்பத்துக்கே, சித்தாண்டி, அரசு வேலை வாங்கி கொடுத்துள்ள தகவல், போலீஸ் வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது. சென்னை மருத்துவமனையில் பதுங்கி இருந்த அவர், போலீஸ் வலையில் சிக்கியதாக தெரிகிறது.இந்நிலையில், நான்காவதாக, குரூப் - 1 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக, 'வாட்ஸ் ஆப்' வழியாக, தேர்வர்கள் தகவல்களை அம்பலப்படுத்துகின்றனர். திருக்குறள் தெரியாமல்? இந்த தேர்வில், மாநில அளவில் முன்னிலை பெற்ற பலர், அரசியல் புள்ளிகளுக்கும், உயர்மட்ட அதிகாரிகளுக்கும் நெருங்கியவர்களாக இருப்பதாகவும்,இவர்களுக்கு முறைகேடாக மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதாகவும், தேர்வர்கள் குமுறுகின்றனர்.குரூப் - 1 தேர்வில் முன்னிலை பெற்று, டி.எஸ்.பி., மற்றும் துணை கலெக்டர் போன்ற பதவிகளுக்கு சென்ற சிலருக்கு, திருக்குறள் கூட சரியாக தெரியாது என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், சேலம், கோவை, திருநெல்வேலி என, சில மாவட்டங்களில் செயல்படும், குறிப்பிட்ட பயிற்சி மையங்களை சேர்ந்தவர்கள் மட்டும், போட்டி தேர்வுகளில் முன்னிலை பெறுவதும், சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஆணையம் கலைப்பா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிப்பதாக, சில மையங்கள் செயல்படுகின்றன. அந்த மையங் களில் சேரும் தேர்வர்களிடம், லட்சக்கணக்கில் பணத்தை கறந்து, மறைமுகமாக, இடைத்தரகர் கள் வழியாக, தேர்ச்சி பெற வைக்கும் முயற்சிகளும் நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தினால், ஒட்டுமொத்த தேர்வு நடவடிக்கைகளுக்கும் பிரச்னை வருமே என, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இந்த விவகாரம், சட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய, தேர்வாணைய குழுவை கலைப்பது குறித்து, ஆலோசனை நடந்து வருவதாக, பணியாளர் சீர்திருத்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பயிற்சி மையங்களின் தில்லாலங்கடி! இதுகுறித்து, தமிழ்நாடு ஐ.ஏ.எஸ்., பயிற்சி அகாடமி கூட்டமைப்பின் செயலர் தமிழ் இயலன் அளித்த பேட்டி:குரூப் - 1 தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக, ஏற்கனவே பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன; வழக்கும் தொடரப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்த பிரச்னை மட்டுமின்றி, நேர்முக தேர்வில் அமரும் அரசு பிரதிநிதிகள் யார்; அவர்கள், தேர்வர்களுக்கு அளித்த மதிப்பெண் என்ன; குறிப்பிட்ட நாட்களில், நேர்முக தேர்வுக்கு சென்றவர்களுக்கு மட்டும், அதிக மதிப்பெண் கிடைத்துள்ளதன் பின்னணி ஆகியவற்றை விசாரிக்க வேண்டும். குறிப்பிட்ட பயிற்சி மையங்களில் உள்ளவர்கள், ஒவ்வொரு தேர்விலும் முன்னிலைக்கு வருவதன் காரணம் குறித்து, பெரும் சந்தேகங்கள் உள்ளன. அதனால், உண்மையாக படித்து, கடுமையாக உழைக்கும் இளம் தலைமுறை மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யின், போட்டி தேர்வில் நம்பிக்கை இழந்து விட்டனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
இடைத்தரகர் பற்றி தகவல் தெரிவித்தால் பரிசு! சென்னை, முகப்பேரில் உள்ள இடைத்தரகர் ஜெயகுமார் வீட்டிற்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார், நேற்று சென்றனர். வீடு பூட்டி இருந்ததால், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, பூட்டை உடைத்து, சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முறைகேடு தொடர்பாக, சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதற்கிடையே, மற்றொரு முக்கிய குற்றவாளியான, சிவகங்கை மாவட்டம், பெரிய கண்ணனுார் கிராமத்தைச் சேர்ந்த, எஸ்.ஐ., சித்தாண்டி, 46, தலைமறைவாகி விட்ட நிலையில், அவரது சகோதரர் மற்றும் உறவினர்களை, சென்னைக்கு அழைத்து வந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேபோல், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே, வாகனத்தை நிறுத்தி, மோசடிக்கு துணைபுரிந்த, கொரியர் நிறுவன ஊழியர்கள் மூன்று பேரிடமும் விசாரணை நடக்கிறது. சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணையில் சிக்கியுள்ள, 10க்கும் மேற்பட்டோரிடம், விசாரணை நடக்கிறது. இதில், சிலரை விரைவில் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்; தலைமறைவாகி உள்ளவர்களையும் தேடி வருகின்றனர்.இதற்கிடையில், இடைத்தரகர் ஜெயகுமார் பற்றி, 99402 69998, 94438 84395, 99401 90030, 94981 05810 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என, போலீசார் அறிவித்துள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews