Search This Blog
Sunday, January 19, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
இன்டர்நெட் பிரச்னையால் தேர்வு கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட குழப்பத்தால், நிராகரிக்கப்பட்ட போலீஸ்காரரை, எஸ்ஐ தேர்வில் பங்கேற்க அனுமதிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த ஆனந்தராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: காவல்துறையில் போலீசாக பணியாற்றுகிறேன். நெல்லை எஸ்பியிடம் என்ஓசி பெற்று, எஸ்ஐ பணிக்கான தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தேன். எனது பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு இமெயில் கிடைத்தது. தேர்வு கட்டணமும் ஆன்லைன் முறையிலேயே செலுத்தினேன். இதுவும் என் வங்கி கணக்கில் உறுதி செய்யப்பட்டது.
ஆனால், இன்டர்நெட் பிரச்னை காரணமாக கட்டணம் தேர்வாணைய கணக்கில் போய் சேரவில்லை. இதனால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்டர்நெட் பிரச்னையே காரணம். எனவே, எனது விண்ணப்பத்தை ஏற்று, எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வில் பங்கேற்கவும், ஹால்டிக்கெட் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப் பாண்டியன் ஆஜராகி, ‘‘கட்டணம் செலுத்துவது தொடர்பான எந்த பிரச்னையும் மனுதாரரை சார்ந்தது. இதை சரி செய்ய 15 நிமிடம் அவகாசம் உள்ளது.
அப்படி முடியாவிட்டாலும் வங்கியில் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் பிரச்னையை கருணையோடு இந்த நீதிமன்றம் பார்க்கிறது. மனுதாரர் தேர்வு கட்டணத்தை வங்கி சலான் அல்லது வரைவோலை மூலம் செலுத்த வேண்டும். இதனடிப்படையில் எஸ்ஐ தேர்வுக்கான அடுத்தகட்ட தேர்வு நடைமுறைகளில் பங்கேற்க சீருடைப் பணியாளர் தேர்வாணை உறுப்பினர்- செயலர் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
CourtOrder
EXAMS
IAS/IPS
இன்டர்நெட் பிரச்னையால் நிராகரிப்பு:SI தேர்வில் போலீஸ்காரரை அனுமதிக்க உத்தரவு
இன்டர்நெட் பிரச்னையால் நிராகரிப்பு:SI தேர்வில் போலீஸ்காரரை அனுமதிக்க உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.