பணியில் இருக்கும் போதே PF பணத்தை எடுக்கலாம்., PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் உள்ளது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 11, 2020

Comments:0

பணியில் இருக்கும் போதே PF பணத்தை எடுக்கலாம்., PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் உள்ளது?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பொதுவாக அவசர தேவை என்பது அனைவருக்கும் வரும் அப்போது நமக்கே தெரியாமல் நமது பெயரில் பணம் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. PF அக்கவுண்டில் இருக்கும் பணத்தை பிற்காலத்தில் அதாவது வேலையில் இருந்து விடுபட்ட பிறகு தான் எடுக்க முடியும் என்ற கருத்து அனைவரிடமும் இருந்து வருகிறது.
அவசரத்துக்கு உதவாத காசு இருந்தால் என்ன இல்லனா என்ன
PF பணத்தை எடுக்கலாமா என்று சிலரிடம் கேட்டால் அய்யயோ அது பிற்காலத்தில் உதவும் இப்போது எடுக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள். அதேபோல் சிலரிடம் கேட்டால் அவசரத்துக்கு உதவாத காசு இருந்தால் என்ன இல்லனா என்ன என்று தெரிவிக்கிறார்கள்.
தனியார் பிரபல நிறுவன ஊழியரும், ஆட்டோ ஓட்டுனரும்
தனியார் பிரபல நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவரும், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் நண்பர்களாக இருந்தனர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் தனது படித்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பரிடம் தனது ஆட்டோ பழுது ஏற்பட்டிருப்பதாகவும் வேலை பார்க்க பணம் இல்லை என்றும் தனது பண கஷ்டம் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த ஆட்டோ ஓட்டுநரின் மொபைல் போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதை எடுத்து ஆட்டோ ஓட்டுநர் பார்த்துவிட்டு ஓலா-வில் இருந்து மெசேஜ் வந்துள்ளது என்று கூறினார்
என்ன மெசேஜ் என்று தெரியாமல் இருந்த ஆட்டோ ஓட்டுனர்
அதை அந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பர் என்ன மெசேஜ் என்று கேட்டார். அதற்கு ஏதோ ரூ.1000, ரூ.2000 அக்கவுண்டில் உள்ளது என்று மெசேஜ் வருகிறது. ஏடிஎம்-ல் செக் செய்து பார்த்தால் எந்த பணமும் இல்லை என்று கூறினார். சந்தேகமடைந்த தனியார் நிறுவன ஊழிய நண்பர் அவரது மொபைல் போனை வாங்கி பார்த்தார். அதை பார்த்தவுடன் ஒரு அதிர்ச்சி என்னவென்றால் அவருக்கு PF அக்கவுண்ட் ஓலா ஓபன் செய்து அதில் பணம் செலுத்தியுள்ளது.
டீக்கடையில் தொடங்கிய பணி
உடனடியாக தனியார் நிறுவன ஊழிய நண்பர் ஒரு டீ குடித்துக் கொண்டே பேசலாம் என ஆட்டோ ஓட்டுநர் நண்பரை அழைத்து சென்று டீக்கடைக்கு சென்றனர். அந்த டீக்கடையில் தனியார் நிறுவன ஊழியர் தனது பணியை தொடங்கினார்.
Our service என்று காண்பிக்கும்
EPFO என டைப் செய்து கூகுளுக்குள் நுழையவும், நுழைந்தவுடன் Our service என்று காண்பிக்கும் அதில் நுழைந்துக் கொள்ளவும். அதன்பின் For employees என்ற வார்த்தையை கிளிக் செய்து கொள்ளவும். உள்ளே நுழைந்ததும். Services-க்கு கீழ் Member passboo, Member UAN/online என்ற வார்த்தைகள் வரியாக காட்டும்.
Member UAN/online
அதில், Member UAN/online என்ற வார்த்தையை கிளிக் செய்யவும். அதன்பின் UAN, Password கேட்கும். தங்களது UAN நம்பர் தங்களுக்கு வரும் மெசேஜ்ஜில் வரும். அல்லது நீங்கள் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தால். தங்களுடைய சேலரி ஸ்லிப்பில் இருக்கும்.
Activate UAN
UAN நம்பர் போட்டவுடன் பாஸ்வேர்ட் டைப் செய்யவும், பாஸ்வேர்ட் தெரியவில்லை என்றால் ஃபர்கட் பாஸ்வேர்ட் கொடுக்கவும். ஒருவேலை அப்படியும் காட்டவில்லை என்றால், UAN, password-க்கு கீழ் Activate UAN என்ற வார்த்தையை கிளிக் செய்யவும். கிளிக் செய்துவிட்டால் UAN நம்பர் மற்றும் தங்களது பதிவிட்ட எண்ணுக்கு ஓடிபி மூலம் ஆக்டிவேட் செய்யலாம்
UAN, Password
பிறகு UAN, Password கிடைத்துவிடும் அதை கிளிக் செய்து உள்ளே நுழைந்தவுடன். தங்களுடைய அக்கவுண்ட் நம்பர், ஆதார் எண் என அனைத்தையும் பதிவிட்டுக் கொள்ளவும். அதன்பின் மேலே Home என்று காட்டும். அதனுள் சென்றால் View என்ற காண்பிக்கும் அந்த வார்த்தையை கிளிக் செய்தவுடன் பாஸ்புக் என்று காட்டும் அதனுள் நுழைந்து அதே UAN, Password டைப் செய்யவும். அதனுள் நுழைந்தவுடன் தங்கள் அக்கவுண்டில் இருக்கும் மொத்த பேலன்ஸ் எவ்வளவு என்று காண்பிக்கும்
Online services அதன்பின் வெளியே வந்து மீண்டும் ஹோம் வார்த்தையை கிளிக் செய்யவும். அதனுள் சென்றால் மெம்பர் ஹோம், பாஸ்புக், ஆன்லைன் சர்வீஸ் என்று காட்டும், ஆன்லைன் சர்வீஸ்-ஐ கிளிக் செய்து உள்ளே நுழையவும்
Claim Form- 75% பணம் மட்டும் உள்ளே Claim Form என்று காட்டும். அதை கிளிக் செய்து உள்ளே நுழைந்தவுடன், தங்கள் அக்கவுண்டில் இருக்கும் மொத்த பணத்தில் இருந்து 75 % அதாவது 10,000 ரூபாய் இருந்தால் ரூ.7,500 மட்டும் டைப் செய்து கொள்ளவும். பிறகு காரணங்கள் கேட்கும். அதில் திருமணம், நிதியுதவி, இயலாதோர் பொருள் வாங்குவது, இல்னெஸ் என்று காட்டும். இதில் பெரும்பாலானோர் இல்னெஸ் என்ற வார்த்தையை தான் கிளிக் செய்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அதை கிளிக் செய்து கொள்ளவும்
AGREE Condition டிக் செய்து கொள்ளவும்
பிறகு தங்களது ஆதார் எண் உள்ள நம்பருக்கு ஓடிபி வரும் அதை கீழே கிளிக் செய்து கொள்ளவும். பிறகு AGREE Condition என்ற வார்ததை அருகில் உள்ள டிக் பட்டனை கிளிக் செய்து கொள்ளவும். அவ்வளவுதான் சப்மிட் செய்து விடலாம். அனைத்து முறையும் சரியாக இருந்தால் தாங்கள் பதிவிட்ட அக்கவுண்ட் நம்பருக்கு அடுத்த சில நாட்களில் பணம் வந்துவிடும் என்ற தெரிவிக்கப்படுகிறது. இபிஎப் வழங்கும் கால அவகாசத்தை பார்த்துவிட்டு, முறையாக பின்பற்ற வேண்டும். பிறகுதான் வித்டிரா செய்ய வேண்டும். அனைத்தும் இபிஎப் விதிகளை ஒருமுறை படித்துவிட்டு மேற்கொள்வது நல்லது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews