Breaking

Sunday, January 12, 2020

அரசு பள்ளிகளில் காலை உணவு: வதந்தி என்கிறார் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
''அரசு பள்ளிகளில், காலை உணவு வழங்கப்படும் என்பது வதந்தி,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில், மாணவ - மாணவியருக்கு, காலை உணவு வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருவதாக, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, தன், 'டுவிட்டர்' பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, அரசு பள்ளிகளில், காலை உணவு வழங்கும் திட்டம், ஜெ., பிறந்த நாளில் துவக்கப்பட உள்ளதாக, ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதை, அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ''அரசு பள்ளிகளில், காலை உணவு வழங்கப்படும் என, வதந்தி பரப்பி வருகின்றனர். ஜன., 13 முதல், பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை அளிப்பது குறித்து, இன்று முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு அறிவிக்கப்படும்,'' என்றார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog