👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, தத்கல் சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டது. ஜனவரி, 6 முதல், 13 வரை விண்ணப்பம் பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேதிகளில், விண்ணப்பிக்க தவறியவர்கள், சிறப்பு அனுமதியான, 'தத்கல்' திட்டத்தின் கீழ், ஆன்லைனில், ஜன., 20, 21ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ள தனி தேர்வர்கள், அரசு தேர்வு சேவை மையங்களுக்கு சென்று, விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். அரசு தேர்வு சேவை மையங்களின் விவரங்களை,
http://www.dge.tn.gov என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், அரசு சேவை மைய தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 – சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பிக்க அனுமதித்தல் தொடர்பாக – கீழ்க்காணும் செய்திக் குறிப்பு மற்றும் அறிவுரைகளை தரவிறக்கம் செய்து பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு சேவை மைய தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING AND INSTRUCTIONS
CLICK HERE TO DOWNLOAD THE EXAM NODAL CENTRES
முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்
பெறுநர்
அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசு சேவை மைய தலைமைஆசிரியர்கள்.
நகல்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.