👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்துவதற்கு, இடைக்கால தடை விதிக்க, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மறுத்து விட்டது.
பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்காக, மத்திய அரசு அறிவித்த, விருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்து, அதன் ஊழியர்கள் ஸ்ரீராம், சுகுமார் இருவரும், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தனர்.மனுவில், 'விருப்ப ஓய்வு திட்டம் சட்ட விரோதமானது. ஓய்வூதிய விதிகளுக்கும், இந்திய ஒப்பந்த சட்டப்படி, பொது கொள்கைக்கும் எதிராக உள்ளது.
'எனவே, இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கு, தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.மாதவன், நிர்வாக பிரிவு உறுப்பினர் டி.ஜேக்கப் ஆகியோர் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலன், ''விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் விருப்ப ஓய்வு பெற, ஊழியர்கள் நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர். எனவே, திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிஷோர் குமார், ''விருப்ப ஓய்வில் செல்லும்படி, கட்டாயம் செய்யப்படவில்லை. இந்த திட்டத்தை ஏற்று, 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தற்போது தடை விதித்தால், பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படும்,'' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்ற உறுப்பினர்கள், 'விருப்ப ஓய்வு திட்டம், விருப்பம் உள்ள ஊழியர்களுக்கு தான். 'இந்த சூழ்நிலையில், இந்த திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. பிரதான வழக்கின் விசாரணை, பிப்., 26க்கு தள்ளி வைக்கப்படுகிறது' என, உத்தரவிட்டனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.